இந்த கேடு கெட்டவங்களுக்கு எல்லோர் முன்னாடியும் கிஸ் அடிச்சு அதை சொல்லுவேன்.. நடிகை பாப்ரி கோஷ் ஒரே போடு..!

தமிழ், பெங்காலி திரைப்படங்களில் நடித்த இவர் சீரியல்களிலும் தனது அற்புத நடிப்பை காட்டி இருக்கிறார். இவர் முதல் முதலில் பெங்காலி திரைப்படமான கால்பேலா என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.

சங்கர் இயக்கத்தில் 2009 ஆம் ஆண்டு வெளி வந்த கத்ரோத் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்து விட்டார். இதனை அடுத்து திரைப்பட வாய்ப்புகள் ஏதும் அவருக்கு சரியாக வாய்க்கவில்லை.

நடிகை பாப்ரி கோஷ்..

தமிழைப் பொறுத்த வரை 2015-ல் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கிய டூரிங் டாக்கீஸ் என்ற தமிழ் திரைப்படத்தில் ஹேமா என்ற அற்புதமான ரோல் செய்த இவர் இந்த படத்தின் மூலம் பட வாய்ப்புகள் வந்து சேரும் என்று எதிர்பார்த்தார்.

இதையும் படிங்க: காரை லாட்ஜாக மாற்றிய சீரியல் நடிகை.. திருமணமான நடிகர்கள் தான் குறி.. இப்படியுமா நடக்குது..?

அந்த வகையில் 2016-ஆம் ஆண்டு பிரான்சிஸ் மார்க்ஸ் இயக்கிய ஓய் என்ற திரைப்படத்தில் நடித்திருக்கிறார். மேலும் 2017-இல் பரதன் இயக்கத்தில் விஜய் மற்றும் கீர்த்தி சுரேஷ் நடித்த பைரவா திரைப்படத்தில் ஒரு சிறிய கேரக்டர் ரோலில் நடித்திருந்தார்.

மேலும் சர்க்கார், விசுவாசம் போன்ற படங்களில் சின்ன சின்ன வேடங்களை செய்த இவர் சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லத்தில் கதாநாயகியாக நடித்து பெருவாரியான ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார்.

கிஸ் அடிச்சு அத சொல்லுவேன்..

இதனை அடுத்து பல தமிழ் மொழி சீரியல்களில் நடிக்க வாய்ப்பு வந்து சேர்ந்தது. அந்த வகையில் பூவே உனக்காக, சித்தி 2, வானத்தைப்போல உள்ளிட்ட பல சீரியல்களில் நடித்து பிரபலமான இவர் அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரைகளில் நடக்கக்கூடிய அட்ஜஸ்ட்மென்ட் பற்றி பேசியிருக்கிறார்.

ஒரே போடு போட்ட பாப்ரி..

அந்த பேட்டியில் அவரிடம் அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேள்வி எழுப்பிய போது சற்றும் தயங்காமல் எப்படி பதிலளித்தார் தெரியுமா? ஒருவர் அட்ஜஸ்ட்மென்ட் பண்ண சொல்லி பட வாய்ப்பு தருவேன் என்று சொன்னால் அவரிடம் எதுவும் நாம் சொல்லக்கூடாது.

அந்த அட்ஜஸ்ட்மென்ட்க்கு அழைத்த நபரை அதிர்ச்சியை சந்திக்கும் படி அவரின் வீட்டிற்கு செல்ல வேண்டும். அதோடு அவரது குடும்பத்தார் முன்பு அவருக்கு ஒரு முத்தத்தை கொடுப்பேன். அப்படி செய்யும் போது அந்த வீட்டில் இருப்பவர்கள் ஏன் இப்படி பண்ணுகிறாய் என்ற கேள்வியை எழுப்புவார்கள்.

இதையும் படிங்க: நடிகை மீனா மறுமணம்.. மாப்பிள்ளை இவரா..? மீனாவே கூறிய பதிலை பாருங்க..

அப்போது என்னை படுகைக்கு அழைத்த அந்த கேடு கெட்ட நபரின் வீட்டில் இருப்பவர்களுக்கு முன்னால் அதாவது அவருடைய குழந்தைகள், மனைவி, உறவினர்கள் எல்லா முன்னோடியும் இவர் பட வாய்ப்புக்காக படுக்கையை பகிர சொல்கிறார். அதனால் தான் முத்தம் கொடுத்து அதற்கு தயாராக இருக்கிறேன் என்று சத்தமாக சொல்வேன்.

இது தான் நான் அவர்களுக்கு கொடுக்கக்கூடிய பதிலடியாக இருக்கும் என நம்புகிறேன் என ஒரே போடு போட்டிருக்கிறார் பிரபல சீரியல் நடிகை பாப்ரி கோஷ். இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறி ரசிகர்களால் அதிகளவு பேசக்கூடிய விஷயங்களில் ஒன்றாக மாறிவிட்டது.

மேலும் உண்மையிலேயே பாப்ரி கோஷ் ஒரு நல்ல தைரியமான பெண்மணி என்பது அவரது வித்தியாசமான பதிலில் இருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம் என்று அவரது ரசிகர்கள் அவரது தைரியத்தை பாராட்டி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version