மேற்கு வங்கத்தைச் சேர்ந்த நடிகை பாப்ரி கோஷ் பெங்காலி மொழியில் பல படங்களில் நடித்திருக்கிறார். தமிழில் இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் வெளியான டூரிங் டாக்கீஸ் என்ற திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து நடிகர் விஜயின் பைரவா சர்க்கார் உள்ளிட்ட படங்களில் நடித்து இருக்கிறார்.
நடிகர் அஜித்தின் விசுவாசம் திரைப்படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்திருந்தார். சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது இவருக்கு சீரியலிலும் வாய்ப்புகள் கிடைத்தது.
அதனை ஏற்றுக்கொண்டு நாயகி, பூவே உனக்காக உள்ளிட்ட சில படங்களில் நடித்தார். தற்போது தமிழக சீரியல் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒருமுகமாக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகி வரக்கூடிய பாண்டவர் இல்லம் என்ற சீரியலில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இவர் வெளியிடக்கூடிய புகைப்படங்கள் மற்றும் இவருடைய வாழ்க்கை முறையை பின் தொடர்வதற்காக கிட்டத்தட்ட இரண்டு லட்சம் ரசிகர்கள் இவரை பின் தொடர்ந்து வருகின்றனர்.
அப்படி தன்னை பின்தொடரும் ரசிகர்களின் ஆவலை பூர்த்தி செய்யும் விதமாக அடிக்கடி தன்னுடைய கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது வெளியிட்டுள்ள சில புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. சீரியலில் புடவை சகிதமாக குடும்ப குத்துவிளக்காக தோன்றும் இவர் தன்னுடைய இணையப் பக்கங்களில் கவர்ச்சியான உடை அணிந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார்.