இதுக்கு ஓ.கேன்னா நான் படுக்கையை பகிர ரெடி..! பகீர் கிளப்பும் பைரவா பட நடிகை..!

வெள்ளி திரையில் பிரபலமான நடிகைகளில் முக்கியமானவர் நடிகை பாப்ரி கோஷ். தமிழ், பெங்காலி உள்ளிட்ட பழமொழிகளில் இவர் நடித்திருக்கிறார். சன் டிவியில் ஒளிபரப்பான பாண்டவர் இல்லம் நிகழ்ச்சி தொடரின் மூலமாக அதிக பிரபலமானவர்.

வேற்று மொழியிலிருந்து தமிழில் வாய்ப்புகளை பெற்ற பிரபலங்களில் பாப்ரி கோஷும் முக்கியமானவர் ஆவார். ஆரம்பத்தில் பெங்காலி சினிமாவின் மீதுதான் இவர் ஆர்வம் காட்டி வந்தார். பெங்காலியில் கால்பெலா என்கிற திரைப்படத்தில் முதன்முதலாக இவர் நடித்தார்.

பெங்காலியில் அறிமுகம்:

2009 ஆம் ஆண்டு இந்த திரைப்படம் வெளியானது. ஆனால் இந்திய அளவில் பெங்காலி சினிமாவிற்கு பெரிதாக வரவேற்பு என்பது கிடையாது தமிழ், தெலுங்கு அளவிற்கு கூட இந்த சினிமா பரவலாக வெளியில் தெரிவதில்லை.

அதனால் தென்னிந்திய சினிமாவில் வாய்ப்பை பெறலாம் என்று இவர் நினைத்தார். அதற்கு முதலில் தென்னிந்தியாவில் சீரியல்களில் அறிமுகமாக வேண்டும் என்கிற நிலை இருந்தது.

பிறகுதான் முதன் முதலாக நாயகி சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் அறிமுகமானார் பாப்ரி கோஷ். அதேசமயம் தமிழ் சினிமாவிலும் அவர் வாய்ப்புகளை பெற்று வந்தார். இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர் இயக்கிய டூரிங் டாக்கிஸ் திரைப்படத்தில் இவருக்கு ஹேமா என்கிற கதாபாத்திரம் கிடைத்தது.

அதனை தொடர்ந்துதான் அவர் சினிமாவில் வாய்ப்பை பெற்று நடிக்க தொடங்கினார். நாயகிக்கு பிறகு அவர் நடித்த பாண்டவர் இல்லம் சீரியல் எக்கச்சக்க வரவேற்பை பெற்றது. அதனை அடுத்து அவர் நிறைய நாடகங்களில் கெஸ்ட் ரோலில் வரத் துவங்கினார்.

தமிழ் சின்னத்திரை பிரபலம்:

பூவே உனக்காக, சித்தி 2, மகராசி மாதிரியான நாடகங்களில் எல்லாம் அவரை பார்க்க முடியும். பிறகு கலைஞர் டிவியில் கண்ணெதிரே தோன்றினாள் என்கிற சீரியலில் நடித்து வருகிறார். மேலும் கௌரி என்கிற ஒரு சீரியலிலும் இவர் நடித்து வருகிறார்.

இதற்கு நடுவே திரைப்படங்களிலும் முக்கிய நடிகர்கள் படங்களில் இவர் நடித்திருக்கிறார். பைரவா திரைப்படத்தில் ஒரு கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அதேபோல சக்க போடு போடு ராஜா, சர்க்கார், விசுவாசம் மாதிரியான திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார்.

சமீபத்தில் அவர் ஒரு பேட்டியில் பேசும் பொழுது அவரிடம் சின்னத்திரை மற்றும் வெள்ளி திரையில் நடக்கும் அட்ஜஸ்ட்மெண்ட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பாப்ரி கோஷ் அட்ஜஸ்ட்மென்ட் செய்தால்தான் பட வாய்ப்பு கிடைக்கும் என்று ஒருவர் நம்மிடம் வந்து கூறினால் அவரிடம் எதுவும் நாம் சொல்லக்கூடாது.

அட்ஜஸ்ட்மென்டிற்க்கு கூப்பிட்ட நபரின் வீட்டிற்கு செல்ல வேண்டும் சென்று அவரது குடும்பத்தார் முன்னிலையில் அவருக்கு முத்தம் கொடுத்து விடுவேன். அப்பொழுது ஏன் இப்படி செய்தாய் என்று அவரது குடும்பத்தார் என்னிடம் கேட்பார்கள்.

அப்போது எனக்கு பட வாய்ப்பு தரேன் ஆனால் என்னோடு அட்ஜஸ்ட்மெண்ட் செய்து கொள்ள வேண்டும் என்று உங்கள் மகன்தான் கூறினார் என்று கூறுவேன். மீதியை அவர்களது குடும்பத்தாரே பார்த்துக் கொள்வார்கள் என்று கூறியிருக்கிறார் பாப்ரி கோஷ்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version