பார்த்திபனின் அந்த எதிர்பார்ப்பு.. இரண்டாவது புருஷன் செய்த கொடுமை.. சீதா குறித்து பிரபல நடிகர் உடைத்த ரகசியம்..!

தொடர்ந்து சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்க நினைத்த இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். இயக்குனர் பாக்யராஜிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த பார்த்திபன் புதிய பாதை திரைப்படம் மூலமாக இயக்குனராக அறிமுகமானார்.

புதியபாதை திரைப்படத்தை அவர் இயக்கும்போது அந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தவர் நடிகை சீதா. அந்த திரைப்படம் முதலில் சீதாவிற்கும் பார்த்திபனுக்கும் இடையே காதல் இருந்து வந்தது. முதலில் காதலை கூறியவர் இயக்குனர் பார்த்திபன்தான்.

சீதாவின் காதல்:

பார்த்திபன் தொடர்ந்து தன்னுடைய காதலை கூறி வந்த காரணத்தினால் ஒரு கட்டத்திற்கு மேல் அதை சீதாவும் ஏற்றுக்கொண்டார். ஆனால் சீதாவின் குடும்பத்தார் இந்த காதலை ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே குடும்பத்தை மீறி தன்னுடைய காதலனை கரம் பிடித்தார் சீதா.

அதற்குப் பிறகு சில வருடங்கள் சீதாவும் பார்த்திபனும் ஒன்றாக சேர்ந்து வாழ்ந்து வந்தனர். பிறகு சில பிரச்சனைகள் காரணமாக நடிகை சீதா பார்த்திபனை விட்டு பிரிந்துவிட்டார். இந்த நிலையில் பார்த்திபனிடம் இது குறித்து ஒரு பேட்டியில் கேட்ட பொழுது சீதா என்னிடம் அதிகமாக எதிர்பார்த்தார்.

அது அவருக்கு கிடைக்கவில்லை அதனால்தான் பிரிந்துவிட்டார் என்று கூறியிருந்தார்.  அதற்குப் பிறகு சீதாவிடம் இதுகுறித்து கூறிய பொழுது நான் அதிகமாக எல்லாம் எதிர்பார்க்கவில்லை. இந்திய பெண்களை பொறுத்தவரை ஒருவனுக்கு ஒருத்தி என்பதுதான் இங்கு உள்ள நிலைப்பாடாக இருந்தது.

பார்த்திபனுடன் பிரிவு:

நான் அதை மட்டும்தான் எதிர்பார்த்தேன் என்று கூறியிருந்தார் சீதா. அதன் மூலம் என்ன காரணத்தால் இவர்கள் இருவரும் பிரிந்தனர் என்பது ஓரளவு மக்களுக்கு புரிந்தது. தொடர்ந்து சீதா இரண்டாவதாக சீரியல் நடிகர் சதீஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் அந்த வாழ்க்கையும் சீதாவிற்கு சுமூகமானதாக அமையவில்லை இரண்டாவது திருமணம் செய்த நடிகர் சதீஷ் சீதாவின் சொத்துக்கள் மீது அதிக ஈடுபாடு காட்டி வந்தார். தொடர்ந்து சீதாவின் வருமானங்களை எடுத்து செலவு செய்து வந்தார் சதீஷ்.

இதனால் விரக்தி அடைந்த சீதா பிறகு அவரையும் விட்டு விலகினார். தற்சமயம் சீதா தனிமையில்தான் வாழ்ந்து வருகிறார். ஆனால் பார்த்திபன் இப்பொழுது மனம் மாறியுள்ளார். பார்த்திபன் தொடர்ந்து பல பேட்டிகளில் பேசும் பொழுது சீதாவுடன் மீண்டும் இணைய இருப்பதாக கூறுகிறார். அவர் மேல் உள்ள காதல் கடுகளவு கூட குறையவில்லை என்று கூறுகிறார் பார்த்திபன். ஆனால் பார்த்திபனை ஏற்றுக் கொள்ளும் மனநிலையில் சீதா இல்லை இதனால் இந்த பிரச்சனை இன்னமும் முடிவை காணவில்லை. இந்த தகவல்களை பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் பகிர்ந்துள்ளார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version