டைவர்ஸ் ஆகி பல வருடம் ஆச்சு.. மீண்டும் இணையும் பார்த்திபன் சீதா.. இது தான் காரணமாம்..!

தமிழ் திரையுலகில் இருக்கும் சிறப்பான இயக்குனரான பாக்யராஜின் உதவி இயக்குனரான பார்த்திபன் புதிய பாதை என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகுக்கு இயக்குனராக அறிமுகமானார்.

இவர் இந்த படத்தில் தன்னோடு இணைந்து நடித்த சீதாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மேலும் இந்த திரைப்படம் அவருக்கு தேசிய விருதை பெற்று தந்ததை அடுத்து தமிழ் திரை உலகில் மறக்க முடியாத இயக்குனர்களில் ஒருவராக மாறினார்.

பார்த்திபன் சீதா..

சீதா மற்றும் பார்த்திபன் தங்கள் காதலில் உறுதியாக இருந்ததை பெற்றோர்களது எதிர்ப்பை மீறி திருமணம் செய்து கொண்டார்கள். இவர்கள் மண வாழ்க்கை மகிழ்ச்சியோடு சென்று கொண்டு இருந்தது.

இதையும் படிங்க: பூஜா ஹெக்டேவின் காதலர் இந்த நடிகரா.. காருக்குள் கையும் களவுமாக சிக்கிய வீடியோ..!

இந்நிலையில் படங்களை இயக்கி வந்த பார்த்திபன் வித்தியாசமான கதைகளை காட்டுவதில் கெட்டிக்காரர். அந்த வகையில் குடைக்குள் மழை, ஹவுஸ்புல், உள்ளே வெளியே போன்ற படங்களை இயக்கினார். எனினும் வசூல் ரீதியாக படங்கள் வெற்றி பெறவில்லை.

இதனை அடுத்து திரைப்படங்கள் இயக்குவதில் இருந்து விலகி நடிப்பில் கவனத்தை செலுத்தி இன்று போல் நடிப்பு அசுரனாக திகழ்கிறார்.

இவர் செல்வராகவன் இயக்கத்தில் வெளி வந்த ஆயிரத்தில் ஒருவன் படத்தில் சோழ மன்னனாக வந்து அனைவரையும் அசத்தியிருந்தார்.

நடிப்பு அசுரன் பார்த்திபன்..

அது மட்டுமல்லாமல் அண்மையில் வெளி வந்த பொன்னியின் செல்வன் ஒன்று மற்றும் இரண்டில் சின்ன பழுவேட்டையராக நடித்தார் என்று சொல்வதை விட அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து காட்டி இருந்தார் என்று தான் சொல்ல வேண்டும்.

அந்தளவு தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய இவர் மீண்டும் திரைப்படங்களை இயக்க விருப்பம் கொண்டதை அடுத்து ஒத்த செருப்பு, இரவின் நிழல் போன்ற வித்தியாசமான படத்தை உருவாக்கி ரசிகர்களை மகிழ்ச்சி கடலில் மூழ்கி அடித்து இருந்தாலும் இந்த படங்கள் சுமாரான வெற்றியைத் தான் பெற்றுத் தந்தது.

விவாகரத்துக்கு பின் இணைகிறார்களா?

இந்நிலையில் கருத்து வேற்றுமை காரணத்தால் நடிகை சீதா தன் கணவர் பார்த்திபனை விட்டு விலகி விவாகரத்து பெற்றுக் கொண்டு தனித்து வாழ்ந்து வருகிறார்.

மேலும் தங்கர் பச்சன் இயக்கத்தில் நடித்த அழகி படம் ரிலீஸ் ஆனதை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பார்த்திபன் புதிய பாதை படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக கூறினார்.

இதையும் படிங்க: குழந்தை இருந்தால் என்ன..? மீனாவை நான் திருமணம் செய்து கொள்கிறேன்.. பிரபலம் பரபரப்பு பேட்டி..!

இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் அனைவரும் மகிழ்ச்சியில் ஆழ்ந்த போது தற்போது புதிய பாதை படத்தை ரீமேக் செய்து தான் தானே நடிப்பேன் என்று கூறியிருப்பதை பார்த்து இவரது வயதுக்கும், உருவ அமைப்பும் அதற்கு செட்டாகுமா? என்ற கேள்வியை எழுப்பி இருக்கிறார்கள்.

இவருக்கு ஜோடியாக மீண்டும் சீதா அந்த கேரக்டரில் இணைவாரா? என்ற முக்கியமான கேள்வியையும் எழுப்பி இருக்கிறார்கள்.

இதற்கு உரிய பதில் விரைவில் கிடைக்கும் என்று நம்பலாம். இதனை அடுத்து இந்த விஷயம் தற்போது ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version