Site icon Tamizhakam

எங்கே இருந்தாலும் நீ நல்லா இரு.. ஆனா.. இதுக்கு ஆசைப்படாதே கதறி அழுத சீதா.. பார்த்திபன் செய்த வேலை…!

எங்கிருந்தாலும் வாழ்க என்ற பாணியில் தற்போது பார்த்திபன் தனது முன்னாள் மனைவி சீதாவிற்கு தெரிவித்திருக்கும் செய்தியினை பலரும் ஆமோதித்திருக்கிறார்கள்.

தமிழ் திரை உலகில் ஒரு காலத்தில் உச்சகட்ட நடிகையாக திகழ்ந்த சீதா புதிய பாதை என்ற படத்தில் இயக்குனர் பார்த்திபனோடு இணைந்து நடித்திருந்தார். அந்த சமயத்தில் தான் இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டு, தனது குடும்பத்தில் இருக்கும் நபர்களை பகைத்துக் கொண்டு பார்த்திபனை திருமணம் செய்து கொண்டார்.

இருவரது வாழ்க்கையும் சிறப்பாக சென்று கொண்டிருந்த வேளையில் நடிகை சீதா பார்த்திபனுக்கும், நடிகை சௌந்தர்யாவிற்கும் இடையே கனெக்சன் உள்ளது என்ற ஒரு கட்டுக் கதையை கிளப்பிவிட்டார். மேலும் விமான விபத்தில் இறந்து போன அந்த நடிகை சௌந்தர்யாவை விரைவில் பார்த்திபன் திருமணம் செய்து கொள்ளப் போவதாகவும் செய்திகள் வெளி வர வகை செய்தார்.

இதனை அடுத்து இருவர் இடையே கருத்து வேற்றுமைகள் வளர ஆரம்பித்தது. அடுத்து சீதா பார்த்திபனை விட்டு பிரிந்து செல்வதற்கு முடிவு எடுத்துவிட்டார். மேலும் இவர்கள் இருவருக்குமே இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில் பார்த்திபன் ஒரு மகனை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

முதல் மகளோடு வசித்து வரும் சீதா தனது இரண்டாவது மகள் கீர்த்தனா, கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்து தேசிய விருதை வென்றவர், இவர் நடிகர் பார்த்திபனோடு தான் வசித்து வருகிறார். அண்மையில் தான் இவரது திருமணம் முடிந்தது.இந்த திருமணத்தில் சீதா மற்றும் பார்த்திபன் பங்கேற்று சிறப்பித்தார்கள்.

2001 ஆம் ஆண்டு கிடைத்த விவாகரத்தை அடுத்து நடிகை சீதா திரைப்படங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்தார். திரைப்படங்களில் நடிப்பதோடு நின்று விடாமல் சீரியல்களில் நடித்த போது இவர் சீரியல் நடிகரான சுதீஷ் மீது காதல் கொண்டார்.

அந்த சமயத்தில் தான் நடிகர் சுதீஷ் அவருக்கு தான் நடிக்கும் சீரியல்களில் ஒரு ரோல் கொடுக்கணும் என்று கேட்டு பலர் பகையை சம்பாதித்து கொண்டார். இதனை அடுத்து 2010 இல் ஏற்கனவே திருமணம் ஆன சுதீஷ்சையும் திருமணம் செய்து கொண்டார்.

இதை அடுத்து இருவருக்கும் இடையே கருத்து வேற்றுமை ஏற்பட்டதின் காரணமாக 2014-ல் விவாகரத்து பெற்றுக் கொண்ட இவர் வாழ்க்கையில் பிடிப்பு இல்லாமல் பல கோயில்களுக்கு சென்று மனநிம்மதியை தேட ஆரம்பித்தார்.

அந்த சமயத்தில் தான் இவர் முன்னாள் கணவர் பார்த்திபனையும் சுதீஸையும் ஒப்பிட்டுப் பார்த்திருக்கிறார். அப்படி ஒப்பீடு செய்து பார்க்கும் போது பார்த்திபன் உடைய நல்ல குணங்கள் அவருக்கு பளிச்சென்று மனக்கண்ணுக்குள் வந்து சென்றுள்ளது.

இதனை அடுத்து பார்த்திபனுடன் மீண்டும் இணைந்து வாழ விரும்புவதாக அவராகவே முன் வந்து ஒரு பேட்டியில் தெரிவித்திருக்கிறார். மேலும் இந்த விஷயம் பார்த்திபன் காதுக்குச்  செல்ல அவன் இதற்கு உரிய பதிலை மிகவும் பக்குவமான முறையில் தெரிவித்திருக்கிறார்.

ஏற்கனவே கூறியது போல அழகை எட்ட இருந்து நான் ரசித்திருக்க வேண்டும். அதை விடுத்து அவரை அழைத்து வந்து நான் ஆராதித்தது என்னுடைய தவறு. இந்த அழகு பல இடங்களில் ஆபத்தை ஏற்படுத்தி உள்ளது என தெரிவித்தார்.

வாழ்க்கை கண்ணாடி போல ஏற்கனவே உடைந்த இந்த கண்ணாடி இனி ஒட்டாது என்று நாசுக்காக பதிலளித்து நீ எங்கிருந்தாலும் நல்லா இரு இனி என்னோடு சேர்ந்து வாழ ஆசைப்பட வேண்டாம். உனக்கு உற்ற நண்பனாக நான் இருப்பேன் என்ற கருத்தை தெரிவித்திருக்கிறார்.

Exit mobile version