நடிகர் பார்த்திபனின் மகள்களை பார்த்துள்ளீர்களா..? இதோ புகைப்படம்..

நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர், கவிஞர், பேச்சாளர் என பார்த்திபனுக்கு பல அடையாளங்கள் உண்டு. பல விதத்திலும் தன்னை ஒரு சிறந்த படைப்பாளியாக பார்த்திபன் அடையாளப்படுத்திக்கொண்டே இருக்கிறார்.

பார்த்திபன்

கடந்த 1990களில் கே பாக்யராஜ் இயக்கத்தில் தாவணிக்கனவுகள் என்ற படத்தில், சிவாஜி கணேசனுடன் இணைந்து நடித்தவர் பார்த்திபன். பல ஆண்டுகள் இயக்குநர் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனராக இருந்தவர்.

அதே போல் பாண்டியராஜன், லிவிங்ஸ்டன், ஆர்பி விஸ்வம் ஆகியோரும் கே பாக்யராஜிடம் உதவி இயக்குனர்களாக இருந்தவர்தான்.

புதிய பாதை

புதிய பாதை என்ற படத்தை இயக்கி, நடித்து பெரிய வெற்றியை பெற்றார் பார்த்திபன். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்த சீதாவை 1990ல் திருமணமும் செய்துக்கொண்டார். 2001ம் ஆண்டில் இருவரும் பிரிந்துவிட்டனர்.

பார்த்திபன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் தன் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். பொண்டாட்டி தேவை, பாரதி கண்ணம்மா, நீ வருவாய் என, ஆயிரத்தில் ஒருவன் என பல படங்களில் நடித்துள்ளார்.

இதையும் படியுங்கள்: கேப்டன் விஜயகாந்துடன் ரோபோ ஷங்கர் மனைவி… ஆள் அடையாளம் தெரியாமல் இருக்கும் போட்டோ..

இரவில் நிழல், ஒத்த செருப்பு போன்ற சிறந்த படங்களை இயக்கி, ரசிகர்களின் மத்தியில் பலத்த பாராட்டை பெற்றதோடு இந்த படங்களுக்கு விருதுகளையும் பார்த்திபன் பெற்றிருக்கிறார்.

ராமன் சீதை போல..

ராமன் சீதை போல பார்த்திபன் சீதா போல என சொல்லும் அளவுக்கு ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழ்ந்த தம்பதிதான் அவர்கள். ஆனால் ஒரு கட்டத்தில் இருவரும் பிரிந்து விட்டனர்.

நடிகர் பார்த்திபன், திருமணத்துக்கு பிறகு சீதாவை நடிக்க அனுமதிக்கவில்லை. ஆனால் பார்த்தின் நடித்துக்கொண்டு தான் இருந்தார். புதிய பாதை படத்தில் நடித்த போதுதான், பார்த்திபன் சீதா காதல் திருமணம் நடந்தது.

முன்னணி நடிகை

அந்த காலகட்டத்தில் சீதா, முன்னணி நடிகையாக இருந்தார். கமலுடன் உன்னால் முடியும் தம்பி படத்திலும், விஜயகாந்துடன் ராஜ நடை படத்திலும் அர்ஜூன் உடன், சங்கர் குரு, படிச்சபுள்ள போன்ற படங்களிலும் சத்யராஜூடன் மல்லு வேட்டி மைனர் போன்ற படங்களிலும் நடித்திருந்தார்.

முன்னணி நாயகர்களுக்கு ஜோடியாக நடித்துக்கொண்டு பீக்கில் இருந்த அவரை திருமணம் செய்த பார்த்திபன், அவரது நடிப்பு ஆசைக்கே முற்றுப்புள்ளி வைத்து விட்டார்.

இதையும் படியுங்கள்:  அதுக்கு முன்னாடி நானும் விஜய்யும் அப்படி இருந்தது இல்ல.. வெளிப்படையாக கூறிய திரிஷா..!

கன்னத்தில் முத்தமிட்டால்

சீதா – பார்த்திபன் தம்பதிக்கு 2 மகன்கள். ஒரு மகன். ஒரு மகள் கீர்த்தனா. கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்திருப்பார். மற்றொரு மகள் அபிநயா. மகன் பெயர் ராக்கி.

சமீபத்தில் தனது மகன் மற்றும் மகள்களுடன் பார்த்திபன் புகைப்படம் எடுத்துக்கொண்டுள்ளார். அந்த புகைப்படங்கள் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆச்சரியமாக

நடிகர் பார்த்திபனின் மகள்களை, மகனை அந்த புகைப்படத்தில் பார்க்கும் பலரும், அட நடிகர் பார்த்திபன் பிள்ளைகளா இது என ஆச்சரியமாக பார்க்கின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version