நீ எங்க இருந்தாலும் நல்லா இரு.. இனிமே இதுக்கு ஆசைப்படாதே.. கதறி அழும் சீதா… நம்பாத பார்த்திபன்..!

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடி என்றால், முதலில் குறிப்பிட்டு சொல்வது பார்த்திபன் சீதாவை தான். ராமர் – சீதை போல பார்த்திபன் – சீதா போல ஒன்றாக, ஒற்றுமையாக, சந்தோஷமாக வாழ வேண்டும் என்றுதான் 25 ஆண்டுகளுக்கு முன் பலரும் வாழ்த்தினார்கள்.

பார்த்திபன் – சீதா

ஆனால் ஒரு காலகட்டத்தில், யாருமே எதிர்பார்க்காத வகையில் பார்த்திபன் – சீதாவும் திடீரென பிரிந்து விட்டனர். இது சினிமாத்துறையினரை, ரசிகர்களை பலத்த அதிர்ச்சியடைய செய்தது.

இந்த பிரிவுக்கு முக்கிய காரணம், தன்னுடன் நடித்த நடிகை சௌந்தர்யா (விமான விபத்தில் உயிரிழந்த நடிகை சௌந்தர்யா) பார்த்திபனுடன் தொடர்பில் இருக்கிறார். பார்த்திபன் அவரை தான் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார் என்று சீதாவே ஒரு கட்டத்தில் புகார் கூறியிருந்தார். அந்த விவகாரம்தான் இருவரது பிரிவுக்கும் முக்கிய காரணமாக ஆகிவிட்டது.

சீதா 2வது திருமணம்

அதன் பிறகு சினிமாவில், சீரியலில் சீதா பழையபடி நடிக்க ஆரம்பித்தார். ஆனால் பார்த்திபனை திருமணம் செய்த போது சீதாவுக்கு இருந்த மவுசு, பிறகு கிடைக்கவில்லை.

விவாகரத்துக்கு பிறகு சினிமாவில் அம்மா, அக்கா, அண்ணி வேடங்களில் சீதா நடித்தார். அதே போல் டிவி சீரியல்களில் முக்கிய கதாபாத்திரங்களில் சீதா நடித்தார்.

அப்போது தன்னுடன் நடித்த சீரியல் நடிகர் சுதீஷ் என்பவரை காதலித்து, சீதா இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அவரும் திருமணமாகி விவாகரத்து ஆனவர்தான். சுதீஷ் உடன் சில ஆண்டுகள் மட்டுமே சீதா வாழ்ந்த நிலையில் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு, ஒருகட்டத்தில் அவரையும் பிரிந்து விட்டார்.

பார்த்திபனுடன் மீண்டும் சேர ஆசை

பிறகு தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்த சீதாவுக்கு, ஒரு கட்டத்துக்கு பிறகு தனது முதல் கணவர் பார்த்திபன் நல்ல மனிதர்தான். அவருடன் கொஞ்சம் அனுசரித்து வாழ்ந்திருக்கலாம் என்ற எண்ணம் வந்த நிலையில், அவர் மீண்டும் பார்த்திபனுடன் சேர்ந்து வாழ ஆசைப்பட்டு இருக்கிறார்.

பார்த்திபன் – சீதா தம்பதிக்கு இரண்டு மகள்கள், ஒரு மகன் இருக்கின்றனர். இதில் ஒரு மகள் சீதாவுடன் இருக்கிறார். கீர்த்தனா என்ற மகள், கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் நடித்த அவர், பார்த்திபனுடனும் இருக்கிறார். இது தவிர ராதாகிருஷ்ணன் என்கிற வளர்ப்பு மகன், பார்த்திபனுடன் இருந்து வருகிறார்.

இந்நிலையில் நான் மீண்டும் என் கணவர் பார்த்திபனுடன் இணைந்து வாழ வேண்டும். பார்த்திபன் மனைவி என்று அங்கீகாரம் எனக்கு வேண்டும் என்று சீதா நேர்காணலில் கூறிய நிலையில், அந்த விஷயங்கள் பார்த்திபன் காதுகளுக்கு சென்றது.

அழகை ஆராதிக்க ஆசைப்பட்டது தப்பு

அதற்கு பதில் அளித்த பார்த்திபன், என் பிள்ளைகளுக்கு அப்பாவாக, சீதாவுக்கு நல்ல நண்பராக இருக்கவே விரும்புகிறேன். அழகை ரசிக்க வேண்டும். அதோடு நிறுத்தி இருக்க வேண்டும். அதை என்னுடனே வைத்துக் கொண்டு அழைத்து வந்து, ஆராதிக்க ஆசைப்பட்டது என் தப்புதான்.

கண்ணாடி உடைந்து விட்டது

கண்ணாடி போல் இருந்த வாழ்க்கை உடைந்து விட்டது. மீண்டும் அதை ஒட்ட வைத்தால் அது மீண்டும் சேராது. ஒட்ட வைத்தாலும் அது அழகாக இருக்காது. அதனால் அவர் எங்கிருந்தாலும் நன்றாக இருக்கட்டும். ஆனால் என்னுடன் சேரும் எண்ணம் அவருக்கு இருக்க வேண்டாம் என்று வெளிப்படையாக கூறி விட்டார்.

இதைக் கேட்ட சீதா, முதலில் வருத்தப்பட்டாலும் பிறகு அவர் இந்த மனநிலையில் இருந்து நிச்சயமாக மீண்டு வருவார். என்றாவது ஒருநாள் என்னை ஏற்றுக் கொள்வார் என்று கூறி வருகிறார்.

இதுகுறித்து ஒரு தரப்பினர் சீதா – பார்த்திபன் மீண்டும் இணைந்து வாழ்ந்தால் நன்றாக இருக்கும். அந்த நட்சத்திர தம்பதி மீண்டும் சேர்ந்து வாழ வேண்டும் என்று கூறி வருகின்றனர்.

என்கூட வாழ ஆசைப்படாதே

நீ எங்க இருந்தாலும் நல்லா இரு, இனிமே என்கூட வாழ மட்டும் ஆசைப்படாதே என்று கதறி அழும் சீதாவை நம்பாமல் பார்த்திபன் கூறியிருப்பதால், அவர் கடைசி வரை மாறவே மாட்டார் என்றும் மற்றொரு தரப்பினர் கூறி வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version