சீதாவை கல்யாணம் பண்ணாம.. இதை பண்ணலாம்ன்னு நெனச்சேன்.. ரகசியம் உடைத்த பார்த்திபன்..!

தமிழ் சினிமாவில் வித்தியாசமான திரைப்படங்களை இயக்கும் இயக்குனர்களில் முக்கியமானவர் இயக்குனர் பார்த்திபன். பெரும்பாலும் பார்த்திபன் இயக்கும் திரைப்படங்கள் வசூல் ரீதியாக பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும் கூட வெகுவாக பேசப்படும் திரைப்படங்களாக இருக்கும்.

அதையும் தாண்டி உலக சினிமாவில் வரும் வித்தியாசமான திரை கதைகளை கையில் எடுத்து அவற்றை திரைப்படமாக தமிழ் சினிமாவிற்கு கொடுக்கக் கூடியவர் பார்த்திபன். உதாரணமாக அவர் இயக்கிய ஒத்த செருப்பு என்கிற திரைப்படத்தைக் கூறலாம்.

மொத்த படத்திலும் ஒரே ஒரு கதாபாத்திரத்தை மட்டுமே வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கியிருந்தார் பார்த்திபன். அதேபோல இரவின் நிழல் திரைப்படம் ஒரே ஷாட்டில் எடுக்கப்பட்ட திரைப்படம் ஆகும். ஏற்கனவே வெளிநாட்டில் இதே போல விக்டோரியா என்ற திரைப்படம் இதே மாதிரி எடுக்கப்பட்டு சாதனை படைத்தது.

பார்த்திபனின் சாதனை:

அந்த சாதனையை முறியடிக்கும் விதமாக தமிழில் இரவின் நிழல் திரைப்படத்தை இயக்கியிருந்தார் பார்த்திபன். இருந்தாலும் கூட பார்த்திபனுக்கு அவருக்கான அங்கீகாரம் என்பது இப்போது வரை தமிழ் சினிமாவில் கிடைக்கவில்லை என்று கூறலாம்.

ஆரம்பக்கட்டத்தில் தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமான பொழுதே பார்த்திபனுக்கு நடிகை சீதாவின் மீது காதல் ஏற்பட்டது. அதனை தொடர்ந்து அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் கடந்த 2004 ஆம் ஆண்டு இவர்கள் இருவரும் விவாகரத்து செய்து கொண்டனர்.

இந்த நிலையில் சமீபத்தில் வந்த விவாகரத்து பிரச்சனை குறித்து ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார் பார்த்திபன். அதில் அவர் கூறும்பொழுது, ”முதன் முதலில் நான் காதல் என்ற ஒன்றை உணர்ந்தது சீதாவிடம்தான் அது எப்படிப்பட்ட காதல் என்றால் சீதாவோடு வாழ வேண்டும் என்கிற ஆசை அப்பொழுது அதிகமாகவே இருந்தது.

திருமண வாழ்க்கை:

விவாகரத்துக்கான வாய்ப்புகள் எங்கள் வாழ்க்கையில் வந்தபோதெல்லாம் நான் விவாகரத்து வேண்டாம் என்று அதை சமாளித்து கொண்டு சென்றேன். ஆனால் எங்களுக்குள் இருந்த கருத்து வேறுபாடு பற்றி நான் நினைக்கவில்லை.

ஆரம்பத்தில் சீதா பெரிய நடிகையாக வேண்டும் என்பதே எனது ஆசையாக இருந்தது. ஆனால் அப்பொழுது சீதா குடும்ப வாழ்க்கையை கவனிக்க வந்துவிட்டார். பிறகு சீதாவே நடிக்க வேண்டும் என்று சென்ற பொழுது எனக்கு அவரை அனுப்புவதற்கு விருப்பமில்லை.

அதனால் குடும்பம் உடைந்துவிடும் என்று நான் நினைத்தேன் ஆனால் அப்பொழுது எவ்வளவு முட்டாளாக இருந்தேன் என்று இப்பொழுதுதான் தெரிகிறது இப்போதைய மனநிலையில் இருந்தால் கண்டிப்பாக ”அம்மா தாயே நீ சூட்டிங் சென்று வா” என்று அனுப்பி இருப்பேன். என்னுடைய மனைவியின் மீது நான் வைத்த காதல் உயிருக்கும் மேலான காதல் என்று உணர்ச்சிபூர்வமாக இது குறித்து பேசி இருக்கிறார் பார்த்திபன்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version