அவ மனசுல வேற ஒருத்தன் வந்துட்டான்.. சீதா குறித்து நடிகர் பார்த்திபன் பரபரப்பு பேச்சு..! ரசிகர்கள் அதிர்ச்சி..!

சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகைகளுக்கு இடையே காதல் ஏற்படுவது என்பது தொடர்ந்து நடந்து வரும் ஒரு விஷயமாக இருந்து வருகிறது. இப்போதைய காலகட்டங்களை விட முந்தைய கால கட்டங்களில் இந்த முறை அதிகமாக இருந்தது.

அப்படியாக உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்திலேயே நடிகை சீதாவை காதலித்து கரம் பிடித்தவர் இயக்குனர் பார்த்திபன். பார்த்திபன் உதவி இயக்குனராக இருந்த காலகட்டத்திலேயே சீதா கொஞ்சம் பிரபலமான நடிகையாக இருந்து வந்தார்.

முதல் காதல்:

பிறகு தன்னுடைய முதல் திரைப்படமான புதிய பாதை திரைப்படத்தை பார்த்திபன் இயக்கும்போது அதில் கதாநாயகியாக சீதாவைதான் நடிக்க வைத்தார். அதற்குப் பிறகு அவர்கள் இருவரின் காதலும் சீதாவின் வீட்டிற்கு தெரிந்தது.

ஆனால் சீதா குடும்பத்தினர் அந்த காதலை ஒப்புக்கொள்ளவில்லை இதனால் சீதாவை அழைத்துச் சென்று திருமணம் செய்து கொண்டார் பார்த்திபன் அவ்வளவு நெருக்கமான காதல் அவர்களுக்குள் இருந்தது. அப்படியெல்லாம் குடும்பத்தை எதிர்த்து திருமணம் செய்து கொண்ட போதிலும் சில வருடங்களுக்கு பிறகு அவர்கள் இருவரும் பிரிந்து விட்டனர்.

தற்சமயம் இருவரும் தனித்துதான் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் பார்த்திபன். அதில் அவர் கூறும்போது நமது வாழ்க்கையில் கடவுள், காதல், சமூகம் இது எல்லாமே மாயை தான்.

பிரிவுக்கு பிறகும் புரிதல்:

ஆரம்பத்தில் இவை எல்லாம் நமக்கு நன்மை பயக்கும் என்று அவற்றின் பின்னால் செல்வோம். ஆனால் ஒரு கட்டத்தில் அவை நமக்கு வருத்தத்தை கொடுக்க துவங்கிவிடும் என்று கூறுகிறார் பார்த்திபன். அவர் சீதா குறித்து கூறும் பொழுது ”சீதாவின் மேல் எனக்கு இருக்கும் காதல் என்பது எப்போதும் குறையாது அதேபோல அவருக்கும் அது குறைவதில்லை. நாங்கள் பேசிக்கொண்டு இருவரும் பிரிய வேண்டும் என்று முடிவு செய்துதான் பிரிந்தோம்.

அதனால் தான் இப்போது வரை நான் சீதாவை பற்றியோ அல்லது சீதா என்னை பற்றியோ தவறான எந்த கருத்துக்களையும் சமூக வலைதளங்களில் பேசியது கிடையாது. அது அந்த அளவிற்கு எங்கள் இருவருக்கும் இடையே எனக்கு புரிதல் என்பது இருந்து வருகிறது.

ஆனால் எனது குழந்தைகளை நினைத்தால்தான் எனக்கு கவலையாக இருக்கிறது. நாங்கள் பிரிவது குறித்து பேசிக் கொண்டிருந்த காலத்திலேயே பயத்துடன் அதை நின்று பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்னுடைய குழந்தைகள். காதல் என்பது எப்போதும் மாறக்கூடியது அதை கதைக்களமாக வைத்து தான் சொர்ணமுகி என்கிற திரைப்படத்தில் நடித்தேன் அந்த படத்தின் கதைப்படி இருவர் காதலித்துக் கொண்டிருப்பார்கள்.

ஆனால் அந்த சமயத்தில் அந்த பெண்ணுக்கு வேறு ஒரு நபரின் மீது காதல் வந்துவிடும் என்று கூறியிருக்கிறார் பார்த்திபன். இதன் மூலம் சீதாவிற்கும் வேறு ஒரு நபருடன் காதல் வந்ததால்தான் அவரை பிரிந்து இருப்பாரோ பார்த்திபன் என்று பேச்சுக்கள் துவங்கியிருக்கின்றன.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version