மனஸ்தாபத்தை மறந்து வாழ்த்து சொன்ன பார்த்திபன்.. ஆனால்.. சேரன் கொடுத்த பதிலை பாருங்க..!

பழைய சண்டை மற்றும் விரோதங்களை மறந்து சேரன் மகளின் திருமணத்திற்கு நடிகர் பார்த்திபன் வாழ்த்து கூறியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆம், கடந்த சில வருடங்களுக்கு முன்னர் சேரன் பார்த்திபன் இடையே மிகப்பெரிய வாக்குவாதம் சண்டை வெடித்தது.

பார்த்திபன் படத்தை விமர்சித்த சேரன்:

அது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பாகவும் பேசப்பட்டு வந்தது. அதாவது சேரன் பார்த்திபன் படத்தை எடுத்துக்காட்டாக மேடையில் பேசி “குப்பை’ படம் என்று கூறி மோசமாக விமர்சித்திருந்தார்.

இந்த விஷயத்தை கேட்டதும் பார்த்திபன் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி பேட்டி ஒன்றில் சேரன் ஒரு சின்சியரான இயக்குனராக இருந்தாலும் மற்றவர்களை காயப்படுத்துவது குறித்து கவலைப்பட்டதே கிடையாது என்றார்.

இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்க ஆரம்பித்தது. அதாவது பாரதி கண்ணம்மா படத்தை சேரன் இயக்கும்போது சாதிகள் ஒழிப்பை பற்றி பேசி இருந்தார்.

ஆனால் அந்த படம் ரொம்ப சீரியஸா இருக்கிறதை பார்த்து நானும் வடிவேலும் ஒரு படத்திற்காக வைத்திருந்த காமெடி டிராக்கை எடுத்து பாரதி கண்ணம்மா படத்தில் வைக்க சொல்லி ஐடியா கொடுத்தோம்.

பிடிவாத குணம் கொண்ட சேரன்:

ஆனால், அந்த காமெடி ட்ராக் ஐடியா அவருக்கு பிடித்திருந்தாலும் கூட நான் சொல்லி அந்த படம் வெற்றி பெற்று விட்டால் அது அவருக்கு அவமானம் ஆகிவிடும் என்பதற்காக,

அந்த காட்சியை பாரதி கண்ணம்மா படத்தில் வைக்கவே மறுத்துவிட்டார். எப்படியோ கடைசியில் சமாதானப்படுத்தி அந்த காட்சியை நாங்கள் வைத்து விட்டோம்.

அதன் பிறகு அதன் பிறகு நிறைய தகராறு செய்து வந்த சேரன் ஊர் முழுக்க எனக்கு கெட்ட பெயரை உண்டாக்கி கொடுத்தார்.

அதாவது, என்னோட கதையில தேவையே இல்லாம பார்த்திபன் வந்து நுழையுறாரு அப்படின்னு என்ன கடுமையா குற்றம் சாட்டி பேசியிருந்தார்.

அப்படித்தான் ஒரு முறை ஏதோ ஒரு குப்பை படத்த பாத்துட்டு வந்து இது பார்த்திபன் படம் மாதிரியே இருக்கு அப்படின்னு மேடையில பேசி என்ன ரொம்ப அசிங்கப்படுத்திட்டாரு என கூறினார்.

பின்னர் பார்த்திபனுக்கு பதில் கொடுத்த சேரன், நான் எந்த படத்தை பார்த்து அப்படி சொன்னேன்னு எனக்கே தெரியல.

ஆனால் கண்டிப்பா குப்பை படம் அப்படின்னு நான் சொல்லியே இருக்க மாட்டேன். சற்று டபுள் மீனிங் அதிகமா இருந்திருக்கலாம்.

பார்த்திபனிடம் மன்னிப்பு கேட்ட சேரன்:

அதற்கு பார்த்திபன் நீங்கள் பேசிய வீடியோவை எனக்கு காண்பித்தார்கள். நான் தெளிவாக அதை பார்த்துவிட்டு தான் என்னுடைய கருத்தை கூறினேன்.

என் மனதில் தேங்கி அவமானங்களில் ஒன்றாக நான் அதை எடுத்துக் கொண்டேன். நிச்சயம் ஏதோ ஒரு தூண்டலில் உங்கள் பேச்சு வெளிப்பட்டதை என்னால் உணர முடிந்தது என பார்த்திபன் கூறினார்.

அதற்கு பதில் அளித்த சேரன், அந்த திரைப்படம் உங்கள் பானையில் இருந்ததாக குறிப்பிட நினைத்தேனே தவிர உங்களுடைய படத்தை குப்பை என்று நான் சொல்லி இருக்க மாட்டேன்.

ஒருவேளை நான் வார்த்தை தவறி வந்து விட்டால் என்னை மன்னித்து விடுங்கள் என பார்த்திபனிடம் மன்னிப்பு கேட்டதோடு,

புதிய பாதை, ஹவுஸ்புல், குடைக்குள் மழை, ஒத்த செருப்பு இந்த படத்தை எல்லாம் பார்த்து நான் உங்களது படத்தை பாராட்டி இருக்கிறேன் என்பது உங்களுக்கு நினைவில் இருக்கும் நினைக்கிறேன் என கூறி இருந்தார் .

இப்படியாக இவர்களது விவகாரம் வாக்குவாதம் சென்று கொண்டு இருந்ததால் இவர்கள் இருவருக்கும் இடையே சற்று மனஸ்தாபம் ஏற்பட்டு பேசிக்கொள்ளாமல் இருந்து வந்தார்கள்.

இந்த சமயத்தில்தான் நேற்றைய முன் தினம் சேரனின் இளையமகள் திருமணத்திற்கு பல்வேறு திரைப்படங்கள் நட்சத்திரங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்.

சேரன் மகளை வாழ்த்திய பார்த்திபன்:

அந்த புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாக அதை பார்த்து சேரனின் மகளுக்கு பலர் வாழ்த்துக்களை கூறி வந்த நிலையில் இயக்குனர் பார்த்திபனும் “மணமக்களுக்கு என் வாழ்த்துக்கள்’ எனக் கூறி பதிவிட்டு இருந்தார்.

இந்த பதிவிற்கு பதில் கொடுத்திருந்த சேரன், “மகிழ்ச்சியும் நன்றியும் சார்” என கூறினார்.இதன் மூலம் அவர்களது சண்டை சமரசத்தில் முடிந்திருப்பதை நம்மால் பார்க்க முடிகிறது.

சேரன் தன்னை எவ்வளவு அசிங்கப்படுத்தி இருந்தாலும் மிகப்பெரிய மனிதாபிமானத்துடன் உயர்ந்த உள்ளத்துடன் அவரது மகளை மனதார வாழ்த்தி உள்ள பார்த்திபனின் நல்ல மனதை பலர் பாராட்டி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version