அடச்சீ… பட ப்ரமோஷனுக்காக இப்படியா… பார்வதி , நித்யா மேனனை தீட்டி தீர்த்த நெட்டென்ஷன்கள்…!

திரைப்படங்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பதற்கு பிரமோஷன் என்பது மிக முக்கியமான ஒன்று. அந்தப் பணியைத்தான் தற்போது பார்வதி மற்றும் நித்யா மேனன் செய்திருக்கிறார்கள்.

மலையாள திரையுலகில் முன்னணி நாயகிகளாக திகழக்கூடிய இவர்கள் இருவருமே திருமணம் ஆகாதவர்கள். ஆனால் திருமணம் ஆகி கர்ப்பமாகிவிட்டது போல் இவர்கள் தனது வலைதள பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி விட்டார்கள்.

 இதுபோலத்தான் கடந்த ஆண்டு நடிகை வனிதா பவர்ஸ்டாரை திருமணம் செய்து கொண்டது போல மாலையுடன் நின்ற புகைப்படத்தை போட்டு இதனை உண்மை என நம்பி நிறைய பேர் வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தார்கள்.

 அதே வழியை பயன்படுத்தி தான் இப்போது பார்வதி மற்றும் நித்தியா மேனன் தன தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கர்ப்பமாக இருப்பதை கண்டறியும் கருவியை புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். மேலும் இந்த கருவியில் இரண்டு கோடுகள் இருந்தால் கர்ப்பம் உறுதி என்று அர்த்தம்.

 

அதே போல் இரண்டு கோடுகளோடு உள்ள அந்த கருவியை தான் இவர்கள் பதிவிட்டு இருக்கிறார்கள் இதனைப் பார்த்து ரசிகர்கள் இவர்கள் இருவருமே கர்ப்பமாக இருப்பதாக நினைத்து வாழ்த்துக்களை தெரிவிக்க ஆரம்பித்து விட்டார்கள்.

 ஆனால் உண்மை என்னவென்றால் ஒரு பட ப்ரமோஷனுக்காகத்தான் அவர்கள் இவ்வாறு செய்துள்ளார்கள் என்பதை தெரிந்து கொண்ட பின்னால் அனைவரும் இவர்களை திட்டி தீர்த்து வருகிறார்கள். பட ப்ரமோஷனுக்காக இப்படியெல்லாமா செய்வார்கள் என்று தற்போது அனைவரும் பேசிக் கொள்கிறார்கள்.

தற்போது இந்தப் புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் அந்த புகைப்படத்தை பார்த்து ஆரம்பத்தில் சந்தோஷப்பட்டாலும் பிறகு இது பொய் என்று தெரிந்த உடனேயே அவர்கள் இருவரையும் திட்டுவதோடு இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபடாதீர்கள் என்று அட்வைஸும் செய்துள்ளார்கள்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …