படத்துல தான் ஹீரோ ரியல் லைஃப்புல..? – பிரபல நடிகரை கிழித்து தொங்கவிட்ட மினுக்கி பார்வதி..

இந்தியாவின் ஒட்டுமொத்த திரையுலகத்தையும் புரட்டிப் போடக் கூடிய வகையில் தற்போது கேரளாவில் வெளி வந்திருக்கும் ஹேமா கமிஷன் அறிக்கை பெண்களுக்கு எதிராக சினிமா உலகில் நடக்கும் அசிங்கமான விஷயங்களை அப்பட்டமாக வெளிப்படுத்தி உள்ளது.

இதைத்தொடர்ந்து இது குறித்து பல்வேறு தரப்பிலிருந்து கண்டனங்கள் எழுந்து வரக்கூடிய சூழ்நிலையில் இதனால் பாதிக்கப்பட்டவர்கள் அவர்களை முன் வந்து பல இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள், பிரபல நடிகர்களின் மீது குற்றச்சாட்டுகளை கூறுகிறார்கள்.

படத்துல தான் ஹீரோ ரியல் லைஃபுல..

கேரளா சினிமா துறையில் ஏற்பட்டிருக்கும் பெருத்த இடியின் காரணமாக திரையுலகமே தற்போது நடுங்கிக் கொண்டிருக்கிறது. இதனை அடுத்து அடுத்த கட்ட நகர்வுகளை நோக்கி திரை உலகம் சென்று கொண்டிருக்கும் வேளையில் பல பிரபல நடிகர்களின் மீதும், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் மீதும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது.

இந்நிலையில் கேரள திரைப்பட சங்கத் தலைவர் நடிகர் மோகன்லால் பல திரைப்படங்களில் அற்புதமான நடிப்பை வெளிப்படுத்தி உத்வேகம் தரக்கூடிய நடிகர்களில் ஒருவராக இளைஞர்களின் மத்தியில் திகழ்கிறார்.

 

ஆனால் அவர் படத்தில் மட்டும் தான் ஹீரோவா? என்று கேட்கக் கூடிய அளவு தற்போது தனது கேரள நடிகர் சங்க தலைவர் பதவியை ராஜினாமா செய்து எந்த விவகாரத்தில் இருந்து கம்பி நீட்டி இருப்பது பலரையும் அதிர்ச்சி அளிக்க வைத்துள்ளது.

கிழித்து தொங்க விட்ட பார்வதி..

இந்நிலையில் நடிகர் மோகன்லால் செய்த இந்த செயல் பற்றி தங்கலான் பட நாயகி மினுக்கி பார்வதி காட்டமாக சில விஷயங்களை அண்மை பேட்டியில் பகிர்ந்து இருப்பது பலர் மத்தியிலும் வரவேற்பை பெற்று இருப்பதோடு மட்டுமல்லாமல் பாராட்டுதல்களையும் பெற்று தந்துள்ளது.

இதற்கு காரணம் மலையாள திரை உலகின் ஜாம்பவானாக திகழக்கூடிய நடிகர் மோகன்லால் இந்த பிரச்சனையை எதிர் நோக்காமல் கோழைத்தனமாக பதவி விலகி இருப்பது பலர் மத்தியிலும் அவரது பெயரை டேமேஜ் செய்யக் கூடிய வகையில் உள்ளது.

இந்நிலையில் இவர் பதவியை விட்டு கோழைத்தனமாக விலகியதை அடுத்து பல முக்கிய பதவியை வகுத்தவர்களும் அந்தப் பதவியை விட்டு ஓடி ராஜினாமா செய்து வருவது கடுமையான அதிர்வலைகளை ஏற்படுத்தியதை அடுத்து மோகன்லால் பற்றி பார்வதி பேசியிருப்பது வைரல் ஆகிவிட்டது.

யாருமே எதிர்பார்க்காத சூழ்நிலையில் நடிகர் மோகன்லால் பதவி விலகி இருப்பது நெருக்கடியை சமாளிக்க முடியாமலா? அல்லது வேறு ஏதாவது காரணம் உள்ளதா? என்ற சந்தேகங்களை கிளப்பியுள்ளது.

தயக்கமும் பயமும் இல்லாமல்..

இதைத்தொடர்ந்து நடிகை பார்வதி இப்படி மோகன்லால் செய்வார் என்று எதிர்பார்க்கவில்லை என்று கூறியதோடு படத்தில் மட்டும் ஹீரோவா இருந்தால் போதுமா? ரியல் லைஃபிலும் அப்படி இருக்க வேண்டாமா? என்று கேட்டிருக்கிறார்.

இந்த விஷயத்தில் தன்னால் எதுவும் ஈடுபட்டு செய்ய முடியாவிட்டாலும் அரசோடு இணைந்து ஒரு வழியை கண்டுபிடிக்கின்ற நோக்கத்தையாவது கொண்டு இருந்தால் அது மிகவும் நன்றாக இருக்கும் என்று பார்வதி கூறினார்.

இதை அடுத்து நடிகை பார்வதியின் ஆதங்கத்தில் அர்த்தம் உள்ளதாக ரசிகர்கள் பலரும் அவருக்கு ஆதரவு தெரிவித்து வருவதோடு மட்டுமல்லாமல் விரைவில் இந்த கமிஷன் கொடுத்த அறிக்கையின் படி குற்றம் செய்தவர்களுக்கு தக்க தண்டனை கிடைக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்தி இருக்கிறார்கள்.

மேலும் எந்த ஒரு தயக்கமும் பயமும் இல்லாமல் இந்த விஷயத்தை வெளிப்படுத்தியிருக்கும் பார்வதியை கண்டிப்பாக பாராட்ட வேண்டும் என்று அவரது கருத்தை பலரும் ஆதரித்து வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version