இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான பசங்க படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்த பசங்க பட நடிகர் தற்பொழுது 34 வயது சீரியல் நடிகை ஒருவருடன் காதலில் இருக்கிறார் என்ற தகவல் மற்றும் அவரோடு இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் சில இணையத்தில் வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்ந்து வருகிறது.
கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான பசங்க திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்பட்டிருந்தது. ஆனால் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்று பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது.
இந்த படத்தை தொடர்ந்து துரோகி, கோலிசோடா உள்ள படங்களில் நடித்து சினிமா ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் நடிகர் கிஷோர். சமீபத்தில் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான தமிழ்நாட்டு அரசின் திரைப்பட விருது இவருக்கு வழங்கப்பட்டன.
இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆஃபிஸ் என்ற சீரியலில் நடித்ததன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமான நடிகை ப்ரீத்தியை இவர் கார்லித்து வருகிறார் என்று தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.
சீரியல் நடிகை மட்டும் இல்லாமல் தொகுப்பாளனி மாடல் அழகி என பல்வேறு திறமைகளை கொண்டிருக்கிறார் நடிகை ப்ரீத்தி மட்டுமில்லாமல் லட்சுமி வந்தாச்சு பிரியமானவள் நெஞ்சம் மறப்பதில்லை உள்ளிட்ட சீரியல்களிலும் தன்னுடைய பங்களிப்பை கொடுத்திருக்கிறார்.
தற்போது இவருக்கு 34 வயதாகின்றது. சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இயங்கி வரும் பசங்க பட கிஷோர் தற்போது தன்னைவிட நான்கு வயது மூத்தவரான நடிகை ப்ரீதியை காதலித்து வருவதாக தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அவர் கூறிய பதிவில் உன்னை திருமணம் செய்து கொள்ளும் நாளை நான் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறேன். அடுத்த வருடம் நமது பிறந்த நாட்களை கணவன் மனைவியாக கொண்டாடுவோம் என பதிவிட்டு இருக்கிறார்.
இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. இதனை பார்த்து ரசிகர்கள் 34 வயது நடிகையை 30 வயதான கிஷோர் காதலித்து வருகிறாரா..? என்று வாயை பிளந்து வருகின்றனர்.
Summary in English : Kishore, the popular actor from movie Pasanga, is making headlines for his relationship with a serial actress who is 4 years older than him. This news has taken the internet by storm and has become the talk of town. Many fans of both artists are curious about the whole situation and are eagerly waiting for more details to emerge.