பசி சத்யா-வை ஞாபகம் இருக்கிறதா..? தற்போதைய புகைப்படத்தை பார்த்து அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

திரைத் துறையைப் பொறுத்தவரை அதிகபட்சமாக துணை கதாநாயகி வேடத்தில் நடித்து வந்தவர் தான் இந்த பசி சத்யா. ஒரு காலத்தில் துணை கதாநாயகி கேரக்டரை செய்ய வேண்டும் என்றால் அது மட்டுமே என்ற எண்ணம் திரைஉலகில் இருந்தது.

 இவர் மேடை நாடகங்களின் மூலம் திரைத்துறைக்கு வந்தவர். இவரின் குறிப்பிடத்தக்க நடிப்பை நீங்கள் மகளிர் மட்டும் திரைப்படத்தில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

 மேலும்  1979ஆம் ஆண்டு வெளியாகிய தமிழக அரசின் தேசிய விருதை  வென்ற படமான பசியில் இவர் நடிகை சோபாவின்  தோழியாக நடித்ததன் மூலம் இவருக்கு பசி என்ற அடைமொழி கொடுக்கப்பட்டது. அதனால்தான் இவரை அனைவரும் பாசி சத்யா என்று அழைக்கிறார்கள்.

 இவர் சுமார் 250க்கும் மேற்பட்ட தமிழ் திரைப்படங்களிலும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மேடை நாடகங்களிலும் நடித்து தன்னுடைய அபாரமான நடிப்புத் திறனை வெளிப்படுத்திய போதிலும்  நல்ல கதாநாயகியான கேரக்டர் ரோல் இவருக்கு திரைப்படத்தில்  அமையவில்லை.

 இவர் 2001 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியான ஷாஜகான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இதனை அடுத்து 2003ஆம் ஆண்டு அன்பே சிவம், பட்டத்துராணி, சுக்கிரன், காதலி போன்ற படங்களில் தொடர்ந்து நடித்து துணை நடிகையின் அந்தஸ்தை அப்படியே தக்க வைத்துக்கொண்டார்.

 பவளக்கொடி நாடகத்தில் தொடங்கி இவர் பயிலும் காலங்களில் பள்ளிகளில் நிறைய நாடகங்களில் நடித்து இருப்பதாக தெரிகிறது. படிப்பில் ஆர்வம் இல்லாததால் தான் இவர் நடிப்பு துறையில் தேர்ந்தெடுத்தார். இவரின் கல்யாண வாழ்க்கை சொல்லிக்கொள்ளும்படி இல்லை.

 இவரது கணவர் ஒரு அரசு ஊழியர் என்றும் இரண்டு மகள்கள் உள்ளதாக தெரிகிறது. இவரின் தற்போது புகைப்படம் வெளிவந்து ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியிருக்கிறது.

சினிமாவை பொறுத்தவரை அதிர்ஷ்டம் இருந்தால் மட்டுமே கதாநாயகியாக ஜொலிக்க முடியும். எவ்வளவு திறமை இருந்தாலும் அவர்களுக்கு அதிர்ஷ்டம் கைகொடுக்கவில்லை என்றால் பாசிசத்யா நிலைமைதான் அனைவருக்கும் தொடரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …