“ஆரோக்கியமான பாசிப்பயறு உருண்டை..!” – சிம்பிளான ஸ்வீட் மச்சி..!

குழந்தைகள் மட்டுமல்லாமல் பெரியவர்களும் விரும்பி உண்ணக்கூடிய பாசிப்பயறு உருண்டையை உங்கள் வீட்டிலேயே நீங்கள் தயாரித்துக் கொடுப்பது மூலம் ஆரோக்கியம் பெருமளவு பேணப்படுவதோடு உடலுக்கு தேவையான முக்கிய ஊட்டச்சத்துக்களும் அப்படியே கிடைக்கும்.

 இந்த பாசிப்பயிர் உருண்டையை நீங்கள் சில மணி நேரங்களிலேயே செய்து முடிப்பதன் மூலம் குழந்தைகள் விரும்பி உண்பார்கள்.

பாசிப்பருப்பு உருண்டை செய்ய தேவையான பொருட்கள்

1.பாசிப்பயறு கால் கிலோ

2.300 கிராம் வெல்லம்

3.இரண்டு ஏலக்காய்

4.முந்திரி பருப்பு 50 கிராம்

5.திராட்சை 50 கிராம்

6.நெய் 50 கிராம்

செய்முறை

முதலில் நீங்கள் எடுத்து வைத்திருக்கும் பாசிப்பருப்பை இளம் சூட்டில் வாணலியில் போட்டு வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.

பிறகு இந்த வறுத்த பாசிப்பயிரினை மிக்சியில் போட்டு நன்கு மை போல அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனை அடுத்து நீங்கள் இனிப்புக்காக எடுத்து வைத்திருக்கும் 300 கிராம் அளவிலான நாட்டுச்சர்க்கரை போட்டு அப்படியே மீண்டும் பொடியாக்கி விடுங்கள்.

 இந்த இரண்டு பொடியையும் தற்போது ஒரு பௌலில் போட்டு விடுங்கள். இதனை அடுத்து நீங்கள் எடுத்து வைத்திருக்கும் திராட்சை முந்திரி இவற்றை போட்டு நன்கு கலக்கி விட்டு நெய்யினை உருக்கி அதில் ஊற்றி சிறுசிறு உருண்டைகளாக பிடித்து விடுங்கள்.

 இப்போது சூப்பர் டேஸ்டில் ஈஸியாக செய்யக்கூடிய பாசிப்பயிறு உருண்டை ஸ்வீட் தயார். குழந்தைகள் மட்டுமில்லாமல் பெரியவர்களுக்கும் ஆரோக்கியத்தையும் எளிதில் ஜீரணத்தை ஏற்படுத்தித் தரக்கூடிய எந்த ஸ்வீட்டை உங்கள் வீட்டிலேயே நீங்கள் செய்து மகிழலாம்.

மேலும் பாசிப்பயிறு உடலுக்கு குளிர்ச்சியை தருவதோடு எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் இருப்பதால் இதனை நீங்கள் நாட்டுசர்க்கரையோடு கலந்து எடுத்துக் கொள்ளும் போது போதுமான அளவு இரும்பு சத்தும் கிடைக்கும் எனவே பெண் குழந்தைகளுக்கு அவசியமாக இந்த பாசிப்பயிறு உருண்டையை கட்டாயம் கொடுக்கவும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …