“படம் செம்ம ஸ்பீடு.. ஆரம்பிச்சதும் தெரியல.. முடிஞ்சதும் தெரியல..” – “பத்து தல” – திரை விமர்சனம்..!

இயக்குனர் கிருஷ்ணா இயக்கத்தில் நடிகர் சிம்பு கௌதம் கார்த்திக் மற்றும் கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடிப்பில் வெளியாகியுள்ள 10 தல திரைப்படம் இன்று மார்ச் 30ஆம் தேதி வெளியாகி இருக்கின்றது.

இந்த படத்தில் பல்வேறு நட்சத்திரங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள் இந்த திரைப்படம் கன்னடத்தில் வெளியான என்ற திரைப்படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால் அந்த படத்தை அப்படியே எடுக்காமல் தன்னுடைய கற்பனையையும் சேர்த்து இந்த படத்தை இயக்கியிருக்கிறார். இயக்குனர் கிருஷ்ணா என்பது படத்தின் டிரைலர் வெளியான போது பலராலும் கூறப்பட்டது.

இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்நிலையில் இந்த திரைப்படம் என்று வெளியாகி இருக்கிறது இந்த படத்தை பார்த்த ரசிகர்கள் தங்களுடைய கருத்துக்களை இணைய பக்கத்தில் பதிவு செய்து வருகிறார்கள் அது குறித்து தற்போது பார்க்கலாம்.

படத்தின் முதல் பாதை விறுவிறுப்பாகவும் இடைவேளைக்கு முன்பு வரக்கூடிய நடிகர் சிம்புவின் என்ட்ரி மாஸாக இருப்பதாகவும் பதிவு செய்து இருக்கிறார் ஒரு ரசிகர்.

படத்தின் முதல் பாதி மிகவும் வேகமாகவும் விறுவிறுப்பாகவும் சொல்கிறது. படம் ஆரம்பித்ததும் தெரியவில்லை முடிந்ததும் தெரியவில்லை என்று நடிகர் சிம்புவின் ரசிகர் ஒருவர் தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார். படத்தை படமாக்கிய விதம் கைத்தட்டல்களை அள்ளுகிறது என்று கூறியது மட்டும் இல்லாமல் படத்தின் கேமராமேன் தன்னுடைய சிறப்பான வேலையை செய்திருக்கிறார் என்று கூறியிருக்கிறார்.

படத்தில் சிலம்பரசன் தோன்றும் ஒவ்வொரு காட்சியும் தீயாக இருக்கிறது. படத்தின் இரண்டாம் பாதி தெரிக்கிறது என்று தன்னுடைய கருத்தை பதிவு செய்திருக்கிறார்.

 

சிம்பு கௌதம் மேனன் இருவரும் மோதிக்கொள்ள கூடிய காட்சிகள் சிறப்பாக வந்திருக்கிறது. குறிப்பாக கிளைமாக்ஸ் அருமையாக இருக்கிறது. படம் தெறிக்கிறது என பதிவு செய்திருக்கிறார் ஒரு ரசிகர்.

சிம்புவின் நடிப்பு ஏ கிளாஸ் என்று தான் கூற வேண்டும். படம் விறுவிறுப்பாகவும் பல்வேறு திருப்பமுனைகளுடன் இருக்கிறது. படத்தின் சண்டைக் காட்சிகள் சிறப்பாக இருக்கின்றன. மேலும் படத்தின் இரண்டாம் பாகம் மிகவும் அருமையாக இருக்கிறது என்ற பதிவு செய்திருக்கிறார் இன்னொரு ரசிகர்.

படத்தின் இரண்டாம் பாதியில் ஆரம்பித்ததும் தெரியவில்லை, முடிந்ததும் தெரியவில்லை அந்த அளவுக்கு விறுவிறுப்பாக சொல்கிறது. படத்தின் பின்னணி இசை படத்திற்கு அற்புதமாக பொருந்தி இருக்கிறது என்று சிலாகிக்கிறார் இந்த ரசிகர்.

இன்னொரு சிம்புவின் ரசிகர் சிம்புவின் என்ட்ரி படத்தின் இரண்டாம் பாதிக்கு அருகில் தான் வருகிறது என்று பதிவு செய்திருக்கிறார்.

காலையிலேயே படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது தக்காளி.. கொளுத்துங்கடா.. தலைவனுக்கு மாநாடு, வெந்து தணிந்தது காடு, பத்து தல என ஹாட்ரிக் ப்ளாக்பஸ்டர் என்று தன்னுடைய மகிழ்ச்சியை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார் ஒரு சிம்பு ரசிகர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …