இயல், இசை, நாடகம் என்று சிறப்பினை பெற்றிருக்கும் நம் தமிழ் மொழியில் விசேஷ காலங்களில் பட்டிமன்றம் நடப்பது உங்களுக்கு மிக நன்றாக தெரியும்.
இந்த நிகழ்ச்சியானது அண்மைக்காலமாக சின்ன திரைகளில் ஒளிபரப்பாகி ரசிகர்களின் மனதில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துக் கூறி பிடிக்கக் கூடிய வகையில் உள்ளது.
பட்டிமன்றம்..
அந்த வகையில் பல தமிழ் சான்றோர்கள் மட்டுமல்லாமல் தமிழில் சிறப்பாக பேசக்கூடிய அனைத்து நபர்களும் எளிதில் பங்கேற்கும் பட்டிமன்றத்தில் தனது அபார திறமையை காட்டக்கூடிய நபராக இருக்கும் பட்டிமன்றம் ராஜா பற்றி விரிவாக இந்த பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
ரசிகர்களால் கரிக்குஞ்சு என்று அழைக்கப்படும் சாலமன் பாப்பையா நடுவராக இருந்து நடக்கும் பட்டிமன்றங்களில் கட்டாயம் தன்னுடைய இடத்தை இன்று வரை தக்க வைத்துக் கொண்டிருக்கும் பட்டிமன்றம் ராஜா மதுரையை சேர்ந்தவர்.
இவர் பட்டிமன்றங்களில் பேசுவதோடு மட்டுமல்லாமல் சில தமிழ் திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருக்கிறார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக வாங்க பேசலாம் நிகழ்ச்சியில் தொகுப்பாளராகவும் பணி புரிந்திருக்கிறார்.
பட்டிமன்றம் ராஜா..
அந்த வகையில் இந்த பட்டிமன்ற ராஜாவை நகைச்சுவை தென்றல், மதுரை தென்றல் என்று பலரும் பல்வேறு அடைமொழிகளை கொடுத்து அழைத்து வருகிறார்கள்.
தொலைக்காட்சியில் பிரபலமாக இருக்கக்கூடிய இவர் வங்கி ஊழியராக பணியாற்றி வருகிறார். ரசிகர்களால் பட்டிமன்றம் ராஜா என்று அழைக்கப்படும் ராஜாவின் இயற்பெயர் திரு சிம்சன் ராஜா என்பதாகும்.
இவர் மதுரையில் உள்ள கீழமாத்தூர் துவரிமான் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் 1959-ஆம் ஆண்டு மே ஒன்றாம் தேதி பிறந்தவர். இவரது தந்தை சிம்சன் தாயார் கமலா பாய்.
இவரது தந்தை பள்ளியில் தலைமை ஆசிரியராக இருந்ததால் அதே பள்ளியில் இவர் படித்தார். பள்ளிப்பருவத்தில் நோஞ்சானாக எதிலும் ஆர்வம் இல்லாமல் இருந்த இவரை இவரது தோழர்கள் நோஞ்சான் என்று தான் அழைத்தார்கள்.
யாருன்னு தெரிஞ்சா அசந்துடுவீங்க..
எனினும் புத்தக வாசிப்பில் ஆர்வம் கொண்ட இவர் பள்ளி நூலகத்தில் இருக்கும் புத்தகங்களை படிக்க ஆரம்பித்தார். அதுமட்டுமல்லாமல் தான் படித்த புத்தகங்களை கொண்டு 5 நாடகங்களை சிறப்பாக எழுதி பள்ளியின் இலக்கிய மன்ற செயலாளராக மாறினார்.
சாலமன் பாப்பையாவின் உறவினரான இவர் பாப்பையா செல்லும் பட்டிமன்றங்களில் பார்வையாளராக அவர் உடனே சென்று வந்தார். இதனை அடுத்து 10 ஆண்டுகளுக்குப் பிறகு எல்ஐசி நிறுவனம் நடத்திய பட்டிமன்றம் ஒன்றில் பேசக்கூடிய வாய்ப்பு கிடைத்தது.
அந்த வகையில் பாலிசி எடுக்கத் தேவை பணமா? பாசமா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் ராஜாவை பேச வைத்தார். மேலும் இவர் அமெரிக்கன் பல்கலைக்கழகம் மற்றும் காமராஜ் பல்கலைக்கழகத்தில் பிகாம் எம்.ஏ போன்ற பட்டங்களை பெற்றிருக்கிறார்.
இதனை அடுத்து மதுரையில் இருக்கும் வங்கியிலேயே இவருக்கு வேலை கிடைக்க லீலா என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு அசோக், விவேக் என்ற இரண்டு மகன்கள் உள்ளார்கள்.
மதுரையில் இருக்கும் ஆல் இந்தியா ரேடியோவில் அவ்வப்போது இலக்கிய சொற்பொழிவுகளை கொடுத்து வந்த பட்டிமன்ற ராஜா இதனை அடுத்து நாள் ஒரு நயம் என்ற நிகழ்ச்சியை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ராஜா மதுரையில் கம்பன் கழகத்தை நிறுவினார். அத்தோடு குங்குமம், கல்கி போன்ற இதழ்களில் பல கட்டுரைகளை எழுதி இருக்கிறார். அத்தோடு ராஜாவும் ராஜாதி ராஜாவும் என்ற நூலை எழுதியிருக்கிறார்.
சிவாஜி, இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா போன்ற 15-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து தனக்கு என்று ஓர் ரசிகர் வட்டாரத்தை வைத்திருக்கிறார்.
பட்டிமன்றத்தில் பேசும் போது மதிப்புக்குரிய நடுவர் அவர்களே என்ற வார்த்தையை சொன்னாலே ரசிகர்களின் கைதட்டல்களை பெற்று விடுவார். பட்டிமன்றத்தை பொறுத்த வரை யார் பேசுகிறார்கள் என்பதை விட யாருடைய பேச்சை மக்கள் அதிகம் ரசித்தார்கள் என்பது தான் முக்கியம்.
அந்த வகையில் பட்டிமன்றம் என்ற பொதுச் சொல்லை தன் அடைமொழியாக கொண்டுள்ள இந்த ராஜா நிஜமாகவே பட்டிமன்றத்தின் ராஜா என்று அழைப்பதில் வியப்பில்லை.
தற்போது இந்த விஷயத்தை அறிந்து கொண்ட ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை இணையத்தில் தெறிக்க விட்டிருப்பதோடு அவர்கள் நண்பர்களுக்கும் பட்டிமன்ற ராஜா பற்றிய விவரங்களை பகிர்ந்து வருகிறார்கள்.