ச்சீ… பவித்ரா லட்சுமியா இப்படி பண மோசடியில் ஈடுபட்டார்..? – என்ன கொடும சார் இது..?

1994 ல் கோயம்புத்தூரில் பிறந்தவர் நடிகை பவித்ரா லட்சுமி. 2010ல் ‘உங்களில் ‘யார் அடுத்த பிரபுதேவா’ என்னும் நடன நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்றார்.

2015ல் மானாட மயிலாட சீசன் 10 ல் போட்டியாளராக பங்கேற்று மூன்றாவது இடத்தை பிடித்தார்.மிஸ் மெட்ராஸ், மெட்ராஸ் ராணி போன்ற பட்டங்களை வென்றுள்ளார். ‘3 சீன்ஸ் ஆஃப் லவ் ஸ்டோரி’ என்னும் குறும்படத்துடன் மூலம் முதன் முதலில் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

அதைத் தொடர்ந்து சிறந்த பொழுதுபோக்கு தொலைக்காட்சியான விஜய் டிவியில் 2020ல் ஒளிபரப்பான குக் வித் கோமாளி சீசன் 2 வில் போட்டியாளராக பங்கேற்றார்.

பொழுதுபோக்கின் நம்பர் ஒன் சேனலாக இருப்பது விஜய் டிவி இத்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒவ்வொரு நிகழ்ச்சியும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

அவ்வாறே குக் வித் கோமாளி ஷோவும் மிகவும் பிரபலமானது இது வெறும் சமையல் நிகழ்ச்சி மட்டுமல்ல, கோமாளி மற்றும் குக் இணைந்து சமைக்கும் புதுவிதமான கான்செப்ட் உடன் நிகழ்ச்சி தொடங்கப்பட்டு வெற்றிகரமாக நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கோமாளிகளாக பங்கேற்ற  சுனிதா, சிவாங்கி, பாலா, புகழ் மேலும் பலரின் காமெடியில் இந்த நிகழ்ச்சி சூப்பர் ஹிட் ஆனது.

பவித்ரா லட்சுமி மற்றும் புகழின் காமெடி ரொமான்ஸ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம். இந்நிகழ்ச்சியின் மூலம் பவித்ரா லட்சுமி நல்ல ரீச் கிடைத்தது.அதைத்தொடர்ந்து நாய் சேகர் என்னும் திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார்.

இந்நிலையில் மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனம் ஒன்று பெங்களூரில் ஆடிஷனுக்காக பவித்ரா லட்சுமி யை தொடர்பு கொண்டுள்ளனர்.

இவரும் ஆடிஷனுக்கு வருவதாக ஒப்புக்கொண்டுள்ளார். இவர் பெங்களூர் வருவதற்கான பிளைட் டிக்கெட்டை தயார் பண்ணி நிறுவனம் ஏற்பாடு செய்ய இருந்தது.

 அதை வேண்டாம் என்று சொல்லிவிட்டு எனக்கு டிக்கெட் எல்லாம் எடுக்க வேண்டாம் நானே என் காசில் டிக்கட் எடுத்து கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.  ஆனால் ஆடிஷன் நடக்கும் நாள் என்று பவித்ரா லட்சுமி ஆடிசினில் கலந்து கொள்ளவில்லை.

இரண்டு நாட்கள் கழிந்த நிலையில் என்னால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் வர முடியவில்லை. பிளைட் டிக்கெட் எல்லாம் போட்டுவிட்டேன்.. இப்போது என்னுடைய பிளைட் டிக்கெட் கேன்சல் ஆகி விட்டது. இதனால் எனக்கு 13,000 நஷ்டம்.. அந்த பணத்தை மட்டும் குடுத்துடுங்க என்று கேட்டுள்ளார். அந்த நிறுவனமும் இவருக்கு பணத்தை போட்டு விட்டுள்ளது.

கொடும காலம்டா சாமி..!

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …