“போன மாசம் கர்ப்பமானேன்..” -இந்த மாசம் ஆமிரை பிரிந்து விட்டேன்..” – பாவனி ரெட்டி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்..!

நடிகை பாவனி ரெட்டி கடந்த மாதம் நான் கர்ப்பமானதாகவும் அதன் பிறகு நாங்கள் இருவரும் தெரிந்து விட்டோம் என்றும் ஒரு பதிவை ரசிகர் அவர்களின் கேள்விக்கு பதில் அளித்து இருப்பது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட பாவனி ரெட்டி தன்னுடைய திருமணம் தோல்வியில் முடிந்து விட்டது. என்னுடைய கணவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறிய விஷயங்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அந்த நிகழ்ச்சியில் வைல்ட் காடு என்ட்ரியாக உள்ளே வந்த நடன இயக்குனர் ஆமீர் என்பவர் உடன் பாவனிக்கு நெருக்கம் ஏற்பட்டது. இந்த நெருக்கம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியான பிறகும் தொடர்ந்து கொண்டிருந்தது.

இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள் என்று கூட தகவல்கள் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பாகவே இவர்களை சுற்றி இந்த செய்திகள் வளர்ந்து கொண்டிருந்தன.

நடிகை பாவனா ரெட்டி விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ரெட்டைவால் குருவி என்ற சீரியலில் நடித்ததன் மூலம் பிரபலமானார். அதன் பிறகு சின்ன தம்பி என்ற சீரியல் நடித்திருந்தார்.

பார்ப்பதற்கு பளபளவென வெட்டி வைத்த வெண்ணை துண்டு போல நெகுநெகு வென இருக்கும் இவர் தெலுங்கு சீரியல் தான் அறிமுகமானார். அப்போது தன்னுடன் நடித்த சக நடிகர் பிரதீப் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆனால் இவர்கள் இருவருக்கும் சிறு சிறு பிரச்சனைகள் என பிரதிப் திருமணமான எட்டு மாதத்திலேயே தன்னுடைய வீட்டிலேயே தவறான முடிவை எடுத்து கொண்டு இறந்தார்.

கணவர் இறந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் சினிமாவிலும் செய்தவிழும் கவனம் செலுத்த தொடங்கிய பவனி ரெட்டி அதனை தொடர்ந்து பெற்றோரின் வற்புறுத்தலால் இரண்டாம் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டிருக்கிறார்.

ஆனந்த் என்பவரை திருமணம் செய்து கொண்ட இவர் மிகவும் எளிமையான முறையில் திருமணம் செய்து கொண்டு அவருடன் வாழ்ந்து கொண்டிருந்தார். ஆனால், திருமணத்திற்கு பிறகு பிரபல தொலைக்காட்சியில் இருந்து ராசாத்தி என்ற சீரியலில் இருந்தும் விலகினார்.

பெற்றோரின் ஆசைக்காக அவர்கள் பார்த்த மாப்பிள்ளை திருமணம் செய்து கொண்டேன். ஆனால், எதுவும் இல்லாமல் போய்விட்டது என அழுதபடி தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், தற்போது ரசிகர் ஒருவர் நீங்கள் அமீரை திருமணம் செய்து கொண்டீர்கள் என்று கூறுகிறார்கள். நீங்கள் அதிகாரப்பூர்வமாக எதுவும் கூற மாட்டேன் என்கிறீர்கள் என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு பதில் அளித்த பாணி ரெட்டி ஆமாம் நான் கடந்த மாதம் நான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்து விட்டீர்கள்.. தற்போது இருவரும் பிரிந்து விட்டோம் என்று கூறுகிறீர்கள்.. அடுத்து அடுத்த மாதம் இருவரும் மீண்டும் திருமணம் செய்து கொள்வோம்.. அதற்கு அடுத்த மாதம் என்ன..? என்று கலாய்க்கும் விதமாக பதில் அளித்திருக்கிறார். இந்த பதில் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …