காசிக்கு போக முடியலயா..? – இங்கே சென்றால் 100% பலன் நிச்சயம்..!

இந்துக்களின் புனித ஸ்தலமாக கருதப்படக் கூடிய காசியை விட பழனி பல மடங்கு சிறப்புகள்  நிறைந்த புனித தலமாக அருணகிரிநாதரால் புகழப்பட்டிருக்கிறது.

காசிக்கு சென்றால் மட்டுமே பாவம் தீரும் என்று நினைக்க கூடிய மக்கள் அனைவரும் காசி சென்று அந்த கடவுளை வழிபடக்கூடிய வாய்ப்புகள்  எல்லோருக்கும் கிட்டுவதில்லை.

அவர்களைப் போல இருப்பவர்கள் காசிக்கு நிகராக கருதப்படக் கூடிய பழனியில்  இருக்கும் முருகப்பெருமானை தரிசித்தாலே முக்தி கிடைக்கும் என்று கூறி இருக்கிறார்கள்.

 இதைத்தான் அருணகிரிநாதர் விதமிசைந்தினி  என துவங்கும் திருப்புகழ் பாடலில் “காசியின் மீறிய பழனி” என்ற வரிகளை கோர்த்துப் பாடி இருக்கிறார்.

 இந்தப் பாடல் வரிகளின் கூற்றுப்படி காசியில் உள்ள கங்கை நதியை விட சிறப்பானது பழனியும் பழனியில் ஓடும் சண்முக நதியும் என்றால் எதற்காக காசிக்குச் செல்ல வேண்டும்.

 இங்கு பழனியை உள்ள முருக கடவுளையும் சண்முக நதியில் நீராடினாலும் போதுமானது  என்ற எண்ணத்தில் சாது ஒருவர் பழனியிலேயே தங்க முடிவெடுத்தார்.

இச்சூழ்நிலையில் பழனி முருகனது சிலையானது நவ பாசனத்தால் போகர் எனும் சித்தரால் செய்யப்பட்டது. இந்தச் சிலையில் பழனி முருகனின் தலை மொட்டையாக இருந்தாலும் பின்புறத்தில் குடுமை உள்ளது பலருக்கும் தெரியாது.இங்கு பஞ்சாமிர்தம் கொண்டு செய்யப்படும் அபிஷேகம் பல நோய்களுக்கு அருமருந்தாக பயன்படுகிறது.

 மேலும் முருகன் இங்கு கோவனம், பூணூல் மட்டும் அணியவில்லை. மார்பின் இரு பக்கத்திலும் சன்னவீரம் எனும் ஆபரணம் அணிந்து கைக்கு வளையல் பாதத்தில் சிலம்பு சடங்கை அணிந்திருக்கிறார். அதனால் தான் சஷ்டி கவசத்தில் கூட பன் மணி சடங்கை என்று பாடியிருக்கிறார்கள்.

 இந்த பழனி கோயில் ஆனது சேர மன்னர்களால் எழுப்பப்பட்டு பாண்டியர்கள், கொங்குச் சோழர்கள், செட்டியார் சமூகத்தினர் என பலரும் திருப்பணிகள் செய்து இருக்கிறார்கள். மேலும் இங்கு மகாலட்சுமி, காமதேனு, சூரியன், அக்னி, பூமாதேவி என பல தெய்வங்களை வழிபடலாம்.

மேலும் திருவாவினன்குடி முருகன் கோயில், பெரிய நாயகி அம்மன் கோவில், சண்முக நதிக்கரையில் உள்ள பெருவுடையார் கோயில், வேணுகோபால் பெருமாள் கோயில் என பல கோயில்கள் இதைச் சுற்றி அமைந்திருக்கிறது.

 இதனாலேயே இந்த திருத்தலத்தை காசிக்கு நிகராக வைத்து அருணகிரிநாதர் அன்றே பாடிவிட்டார். அதனை அறிந்து முருக பக்தர்கள் அனைவரும் இந்த திரு கோயிலுக்கு வந்து முருகனின் பேரருளை பெற தினமும் காத்திருக்கிறார்கள் எனக் கூறலாம்.

எனவே அந்த சாது பழனியில் தங்கியது சரி யான முடிவு தான். காசிக்குப் போக முடியவில்லை என்று நினைக்கும் அனைவரும் ஒருமுறை பழனி முருகனை சென்று தரிசித்து வந்தாலே காசிக்கு நிகரான பலன் அவர்களுக்கு கட்டாயம் கிட்டும் என்பது அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடலில் இருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version