ரத்தத்தை விற்று சோறு போட்ட கவுண்டர்.. பீலி சிவம் வெளியிட்ட உருக வைக்கும் தகவல்..!

பழம்பெரும் நடிகரான பீலிசிவம் திரைப்படங்களிலும் தொலைக்காட்சி நாடகங்களிலும் சுமார் 60 ஆண்டுகளுக்கும் மேலாக நடித்து பெருவாரியான ரசிகர்களை தனக்காக பெற்றுக் கொண்டவர்.

இவர் நாடகத் துறையில் மிகச்சிறந்த நடிகராக வலம் வந்ததை அடுத்து தமிழக அரசின் கலைமாமணி விருதினை 1995-ஆம் ஆண்டு பெற்றிருக்கிறார்.

நடிகர் பீலி சிவம்..

பி எல் சின்னப்பன் என்ற இயற்பெயரைக் கொண்ட பீலிசிவம் 1938-ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5-ஆம் தேதி பிறந்தவர். இவர் தூரத்தில் இடி முழக்கம் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகிற்கு அறிமுகம் ஆனார். இந்த படத்தில் விஜயகாந்த் உடன் இணைந்து நடித்திருக்கிறார்.

மேலும் வளர்ந்து வரும் நடிகர்களுக்கு முன்னோடியாக திகழ்ந்த நடிகர் பீலிசிவம் இமைகள், துரத்தும் இடி முழக்கம், அபிமன்யு, தங்கபாப்பா, முஹம்மது பின் துக்ளக், விருதகிரி, அழகன், முதல் வசந்தம், மனசுக்கேத்த மகராசா ஆகிய திரைப்படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்.

மேலும் ஏராளமான படங்களில் குணச்சித்திர வேடத்தில் நடித்திருக்க கூடிய இவர் நகைச்சுவை நடிகர் கவுண்டமணி பற்றி பேசி இருக்கும் விஷயங்கள் பற்றி இந்த பதிவில் படிக்க தெரிந்து கொள்ளலாம்.

2009-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசின் வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற இவர் கோவை மாவட்டத்தை சேர்ந்தவர்.

ரத்தத்தை விட்டு சோறு போட்ட கவுண்டர்..

அந்த வகையில் இவர் நடிகர் கவுண்டமணி பற்றி பேசும் போது இவரும் கவுண்டமணியும் ஒரு நாள் ரோட்டில் நடந்து கொண்டு சென்ற போது இருவரும் சாப்பிடாமல் இருந்த காரணத்தால் பசி எடுத்திருக்கிறது.

எனினும் இருவர் கையிலும் சல்லி பைசா இல்லாத நிலையில் எப்படி சாப்பிடுவது என்று யோசித்த பொழுது கவுண்டமணி கொஞ்சம் நேரம் இரு வரேன் என்று சொல்லிவிட்டு போனாராம்.

இதனை அடுத்து கையில் பரோட்டா உடன் வந்து சேர்ந்த கவுண்டமணி தன்னிடம் அந்த பரோட்டா பொட்டணத்தை தந்தவுடன் உனக்கு மட்டும் எங்கிருந்து காசு வந்தது என்று நான் கேட்டேன்.

அப்போது அவர் கூறிய விஷயம் என்னவென்றால் பக்கத்தில் தான் ரத்த வங்கி இருக்கு. அங்கு ரத்த தானம் செய்து கிடைத்த பணத்தில் தான் பரோட்டா வாங்கி வந்தேன் என்று கண் கலங்க சொல்லி இருக்கிறார் மறைந்த நடிகர் பீலிசிவம்.

நடிகர் பீலி சிவம் வெளியிட்ட உருக வைக்கும் தகவல்..

இந்த விஷயத்தை அவர் அளித்த பேட்டியில் சொல்லி இருந்ததை அடுத்து ரத்தத்தை விற்று சோறு போட்டார் கவுண்டர் என்ற வார்த்தையின் அழுத்தம் என்ன என்பதை ரசிகர்கள் புரிந்து கொண்டு கவுண்டமணியை பாராட்டி வருகிறார்கள்.

அதுமட்டுமல்லாமல் இது போன்ற நட்பு என்று கிடைக்குமா என்பது சந்தேகமான ஒன்று தான் எனினும் அன்றே தனது நண்பருக்காக மிகப்பெரிய தியாகத்தை செய்ததை அடுத்த தான் கவுண்டமணி இன்றளவு வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார் என்று சொல்லலாம்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியிலும் பேசும் பொருள் ஆகிவிட்டது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version