“மூளைக்கு உறுதியை சேர்க்கும் பீர்க்கங்காய் தோல் துவையல்..! “- செய்யத் தெரிந்து கொள்ளலாமா..!!

பச்சை நிற காய்கறிகளின் முக்கிய இடத்தை பிடித்திருக்கும் பீர்க்கங்காய்  ஆரோக்கியத்தை தரக்கூடிய சிறந்த சத்துக்களை கொண்ட காயாகும். சுவையோடு இருக்கும் இந்த காயை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.

பீர்க்கங்காய் கொண்டு சாம்பார், பொரியல் என வகைவகையாக செய்து அசத்தும் பெண்கள் அதன் தோலை கொண்டு துவையலை செய்து அனைவரையும் அசத்த முடியும்.இனி  இந்த கட்டுரையில் பீர்க்கங்காய் துவையல்  எப்படி செய்யலாம் என்பதை பார்க்கலாம்.

பீர்க்கங்காய் துவையல் செய்ய தேவையான பொருட்கள்

1.பீர்க்கங்காய் தோல் 100 கிராம்

2.வரமிளகாய் நான்கு

3.சிறிதளவு புளி

4.தேவையான அளவு உப்பு

5.எண்ணெய்

6.உளுத்தம்பருப்பு இரண்டு டீஸ்பூன்

7.பெருங்காயத்தூள் ஒரு சிட்டிகை

 செய்முறை

 முதலில் அடுப்பில் வாணலியை வைத்து சிறிதளவு எண்ணெயை ஊற்றி அடுப்பினை  இளம் தீயில் வைத்துக்கொண்டு அதில் பீர்க்கங்காய் தோலை போட்டு நன்றாக வதக்க வேண்டும்.

 பின்னர் பீர்க்கங்காய் தோல் நன்கு வதங்கிய பின்பு இதிலேயே மிளகாய் வற்றல் மற்றும் உளுந்து பருப்பு பெருங்காயத்தூள் போன்றவற்றை போட்டு மீண்டும் நன்றாக வணக்க வேண்டும்.

அதன் பின் இந்த கலவையை ஒரு தட்டத்தில் எடுத்து வைத்துவிட்டு  சூடு ஆறும் வரை காத்திருக்கவும் இனிய இதனை மிக்ஸியில் போட்டு தேவையான உப்பை சேர்த்து மைய அரைத்து விடுங்கள்.

ஒரு சுவையான மூளைக்கு உறுதியை அளிக்கக்கூடிய பீர்க்கங்காய் துவையல் ரெடி. சுடச்சுட சாதத்தோடு சாப்பிடும் போது சுவை அலாதியாக இருக்கும்.

வெள்ளரி இனத்தைச் சேர்ந்த இந்த பீர்க்கங்காய் எண்ணற்ற மருத்துவ பயன்களை கொண்டுள்ளது இளம் பீர்க்கங்காய் பிஞ்சுகளை சாப்பிடுவதை விட சற்று முத்தையா பீர்க்கங்காயை உண்ணுவதின் மூலமே எண்ணற்ற நன்மைகள் நமக்கு வந்து சேரும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …