இந்த படிக்கட்டுக்கு 11 லட்சமா..? பொங்கிய அனிதா சம்பத்..! வந்து விழுந்த பதில்..!

செய்தி வாசிப்பாளினியாக பணியாற்றி நட்சத்திர நடிகை ரேஞ்சுக்கு மிகப்பெரிய அளவில் பிரபலமானவர்தான் அனிதா சம்பத்.

இவர் மிக குறுகிய காலத்திலேயே டாப் நட்சத்திர நடிகையாக அளவுக்கு பெயரும் புகழும் பெற்று புகழ் பெற்றார்.

செய்தி வாசிப்பாளர் அனிதா சம்பத்:

இதன் மூலம் அவருக்கு விஜய் தொலைக்காட்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த வாய்ப்பை மிகச் சரியாக பயன்படுத்திக் கொண்ட அனிதா சம்பத்திற்கு அதை எடுத்து திரைப்பட வாய்ப்புகளும் சீரியல் வாய்ப்புகளும் தேடி வந்தது.

இதனிடையே தனது சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர் அனிதா சம்பத்.

இவர் தனுடன் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த பிரபா என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தனது கணவருடன் திருமணத்திற்கு பிறகு YouTub சேனலில் வீடியோ வெளியிட்டும் அதன் மூலம் கணிசமான வருமானத்தையும் சம்பாதித்து வருகிறார் அனிதா சம்பத் .

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு அவருக்கு தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைக்க தொடர்ந்து ஒரு சில திரைப்படங்களில் சின்ன சின்ன கதாபாத்திரங்களிலும் நடித்து வருகிறார் .

இதனிடையே பல்வேறு விளம்பரங்களிலும் நடித்து அதிலும் கணிசமான வருமானத்தை சம்பாதித்து வருகிறார் அனிதா சம்பத்.

சீரியலில் அறிமுகம்:

இந்த நிலையில் தற்போது ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் சமையல் போட்டி நடத்தி வைக்கும் தொகுப்பாளராக கலந்து கொண்டார். இதன் மூலம் அவர் தொலைக்காட்சி சீரியல்களிலும் தனது அறிமுகத்தை கொடுத்திருக்கிறார்.

இதற்கிடையில் எப்போதும் சமூகத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்து தனது கருத்தை வெளிப்படையாக பதிவிட்டு வரும் அனிதா சம்பத் தற்போது தனது insta- வில் பதிவிட்ட வீடியோ என்று இணையத்தில் வெளியாகி நெட்டிசன்கள் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

வாய்விட்டு மாட்டிக்கொண்ட அனிதா சம்பத்:

அதாவது காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த மாங்காடு பக்கத்தில் உள்ள கொழுமணிவாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட குலத்திற்கு நடைபாதை படிக்கட்டு மேம்பாட்டு பணிக்காக ரூபாய் 11.36 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அங்குள்ள ஒரு சுவற்றில் எழுதப்பட்டிருக்கிறது.

இதை குறிப்பிட்டு கருத்து பேசிய அனிதா சம்பத்… இந்த படிக்கட்டுகளை கட்டுவதற்காக ரூ. 11.36 லட்சமா? ரூ. 12 லட்சத்தில் முழு வீடே கட்டி விடலாமே என்று கேள்வி எழுப்பி அந்த வீடியோவை பகிர்ந்திருந்தார் .

இதற்கு அதிகமான கருத்துக்கள் குவிந்து வருகிறது. ஒரு சிலர் எங்க ஊரிலும் இப்படித்தான் சின்டெக்ஸ் டேங்க் மட்டும் வைத்துவிட்டு அதற்கு லட்சக்கணக்கு எழுதி விடுகிறார்கள் என்று கூறியிருக்கிறார் .

இன்னும் ஒரு சிலர் அக்காவுக்கு கொஞ்சம் தெளிவு தேவை… நீங்கள் ஒரு செய்தி வாசிப்பாளராக இருந்துவிட்டு இப்படி பேசுவது சரி இல்லை.

பொங்கி எழுந்த அனிதா… இது தேவையா?

நடைபாதை படிக்கட்டு அந்த குளத்தை சுற்றி அமைக்க வேண்டும். அத்துடன் மின்விளக்குகள் மற்றும் அதற்கான பராமரிப்பு செலவு , நீங்கள் நின்று கொண்டிருக்கும் இன்டர் லாக் போடப்பட்ட நடைபாதையும் சேர்த்துதான் அவ்வளவு தொகை அதில் குறிப்பிட்டுள்ளனர்.

எனவே அனிதா சம்பத்திற்கு இன்னும் கொஞ்சம் தெளிவு வேண்டும் என விளக்கத்தை கொடுத்து வருகிறார்கள்.

இப்படி சமூக அக்கறை சார்ந்த கருத்து பேசுறேன் என்று பொங்கிய அனிதா சம்பத் பிரச்சனையில் சிக்கிக் கொண்டிருப்பதை பலர் ட்ரோல் செய்துள்ளனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version