தேன் ஒழுகும் குரலி்ல் பேசி.. இளசுகளை கட்டிப்போட்டு வைத்திருந்த பெப்ஸி உமா..! – இப்போ எப்படி இருக்காங்கன்னு பாருங்க..!

டிவி சேனல் நிகழ்ச்சி தொகுப்பாளர்களில் மறக்க முடியாதவர் பெப்ஸி உமா. இவர் பேசிக்கொண்டு இருந்தால், மணிக்கணக்கில் கேட்டுக்கொண்டே இருக்கலாம். குரலில் அவ்வளவு இனிமையும், பேசும் தமழில் அவ்வளவு அழகும் கலந்திருக்கும்.இவரது தந்தை ஒரு லாயர். அம்மா நடனக் கலைஞர், ஓவியக்கலைஞரும் கூட. இளம் வயதிலேயே பெப்ஸி உமா என்கிற உமா மகேஸ்வரி, பரத நாட்டியம் கற்றவர். தூர்தர்ஷன் டிவியில் ஷூட்டிங் நடப்பதை பார்க்க போன உமாவுக்கு, ஒரு நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. ‘வாருங்கள் வாழ்த்துவோம்’ என்ற அந்த நிகழ்ச்சி, 100 எபிசோடுகளை கடந்து சென்றிருக்கிறது.

அதன்பின்பு தான், சன் டிவியில் பெப்ஸி உங்கள் சாய்ஸ், டிவி நேயர்களின் விருப்பப் பாடல்களை டெலிபோன் வழியாக கேட்டு ஒளிபரப்பும் நிகழ்ச்சியை நடத்தி இருக்கிறார். இவர், இந்த நிகழ்ச்சியை தொகுப்பாளராக நடத்த போட்ட ரெண்டு கண்டிசன்கள் என்ன தெரியுமா? உடை விஷயங்களில், நிகழ்ச்சியை தொகுத்து பேசி அளிப்பதி்ல் தலையீடு இருக்கக்கூடாது என்பதுதான்.

இப்போது, டிவியில் ஒரு நிகழ்ச்சியை ஒரு தொகுப்பாளர் ஒரு ஆண்டு தொகுத்து வழங்குவதே பெரிய விஷயம், ஆனால், பெப்ஸி உமா, சன் டிவியில் பெப்ஸி உங்கள் சாய்ஸ் நிகழ்ச்சியை 18 ஆண்டுகள் நடத்தியது, ஆச்சரியமளிக்கிறது. அதிலும், வாரந்தோறும் பெப்ஸி உமாவிடம் பேச, டெலிபோன் அருகில் தவம் கிடந்தவர்கள் ஏராளம். நிகழ்ச்சியில் உமா அணிந்து வரும் புடவையை காணவே, பெண்களில் ஒரு மாபெரும் கூட்டமே இருந்தது குறிப்பிடத்தக்கது.

அதன்பின், கங்கை அமரனுடன் இணைந்து 11 ஆண்டுகள் ஸ்டார் ேஷா நிகழ்ச்சியை நடத்தி, அதிலும் மாபெரும் வெற்றி கண்டார். ஜெயா டிவியில் உமா வழங்கிய ஆல்பம் நிகழ்ச்சிக்கும் பலத்த வர்வேற்பு கிடைத்தது. இந்த காலகட்டத்தில், பெப்ஸி உமா பல விளம்பர படங்களில் நடித்தார். ஆனால், தேடி வந்த சினிமா வாய்ப்புகளை மறுத்து விட்டார்.

தொடர்ந்து டிவி நிகழ்ச்சிகள், டிஆர்பி ரேட்டிங் என்பதற்காக பல அரட்டை கச்சேரி நிகழ்ச்சிகளை அரங்கேற்ற துவங்கின. அதில் பல வாய்ப்புகள் உமாவை தேடி வந்தன. ஆனாலும், தனது தனித்தன்மை மாறாமல், தனக்கேற்ற நிகழ்ச்சிகள் இல்லாததால் டிவி மீடியாவை விட்டு சுத்தமாக ஒதுங்கி விட்டார் உமா. தனது குடும்பத்துடன் ஒரு இல்லத்தரசியாக, கணவரின் கட்டுமான தொழிலை கவனிக்கும் ஒரு நிர்வாகியாக இருந்து வருகிறார்.

ஆனால், இன்றும் நிகழ்ச்சி தொகுப்பாளினிகளில் பெப்ஸி உமா இடத்தை யாரும் நெருங்கக் கூட முடியவில்லை என்பதுதான் உண்மை. சமீபத்தில் நடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில், இன்ஸ்டாகிராம் பிரபலம் ரேகா என்பவர் அங்கு வந்த உமாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், செம வைரலாகி வருகிறது. இன்னும் பழைய அழகில், இளமை மாறாமல் ஜொலிக்கிறார் உமா.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …