‘முதல்வர் மகனும் நடிக்கலாம், வீரப்பன் மகளும் நடிக்கலாம்’ – சினிமா குறித்து, கிண்டலாக பேசிய இயக்குநர் பேரரசு

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்களில் ஒருவர் பேரரசு. இவர் பல வெற்றிப்படங்களை தந்திருக்கிறார்.

விஜய் நடித்த திருப்பாச்சி, சிவகாசி, அஜீத் நடித்த திருப்பதி மற்றும் திருத்தணி, திருவண்ணாமலை, பழனி, தர்மபுரி  உள்ளிட்ட படங்களை இயக்கியவர். இதில், சில படங்கள் மாபெரும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

 கே.என்.ஆர் ராஜன் என்பவர் தயாரித்து, கதாநாயகனாக நடிக்கும் மாவீரன் பிள்ளை என்ற படத்தில் வீரப்பன் மகள் விஜயலட்சுமி கதாநாயகியாக நடிக்கிறார். தெருக்கூத்து கலைஞராக நடிகர் ராதாரவியும் நடிக்கிறார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது.

விழாவில் பங்கேற்று பேசிய இயக்குநர் பேரரசு, ஒரு படத்தை பார்க்கும்போது அதில் ஹீரோ, ஹீரோயின் யார் என பார்க்கக்கூடாது. படத்தின் கதை என்ன, கருத்து என்னவென்றுதான் பார்க்க வேண்டும்.

சினிமாவில் முதல்வர் மகனும் நடிக்கலாம்; வீரப்பன் மகளும் நடிக்கலாம். சினிமா யார் நடித்தாலும் சினிமா ஏற்றுக்கொள்ளும். அந்த வகையில், புதுமுக நாயகியாக, விஜயலட்சுமியை ஆதரித்து ஏற்றுக்கொள்ளலாம்.

இன்றைய காலகட்டத்தில், தெருக்கூத்து கலை அழிந்து வருகிறது. ஆனால், டாஸ்மாக் மதுக்கடைகளின் முன், பலவிதங்களில் குடிமகன்கள் தெருக்கூத்து ஆடுகின்றனர். விஜய், பிரபுதேவாவை விட , போதையில் குடிமகன்கள் நன்றாக ஆடுகின்றனர்.

பள்ளி மாணவியர் மது குடிப்பதை போன்ற வீடியோக்கள் பரவி வருகிறது. சாராயம் விற்கும் காசில், அரசாங்கம் நடத்துவதை தவிர, கேவலம் இந்த உலகில் வேறு எதுவும் இல்லை.

இந்த படத்தில் ஆலயமணி எழுதிய ‘ சாராயம் அபாயம்’ என்ற பாடலை, டாஸ்மாக் மதுக்கடைகளின் முன், மது ஒழிப்பு பிரசார பாடலாக வைக்கலாம். அதை கேட்டாவது, சிலர் குடிப்பதை நிறுத்திவிட்டு, திருந்துவார்கள். இந்த படம், நிச்சயம் சமூக கருத்துள்ள நல்ல படமாக இருக்கும், என பேசியுள்ளார்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …