கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் திரைக்கதைகள் ரசிகர்களிடம் தொடர் வரவேற்பை பெற்று வருவதால், பல முன்னணி நடிகைகள் டைட்டில் ரோலில் நடிக்க ஆர்வம் காட்டி வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை காஜல் அகர்வாலின் அடுத்த திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. உமா என தலைப்பிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தில் லீடிங் ரோலில் நடிக்க உள்ளார் காஜல் அகர்வால்.
விஜய், அஜித், தனுஷ்,சூர்யா என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களின் திரைப்படங்களில் நடித்து பிரபலமான நடிகையாக திகழ்பவர் நடிகை காஜல் அகர்வால். இவர் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் காஜல் அகர்வால் நடிக்கவுள்ள புதிய திரைப்படம் குறித்த அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. ’உமா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள புதிய திரைப்படத்தில் உமா என்றகேரக்டரில் நடிக்க உள்ளார் காஜல் அகர்வால்.
இந்த படத்தை விளம்பர படங்களை இயக்கிய தாதாகாதா சின்ஹா என்பவர் இயக்க உள்ளதாகவும், அவிஷேக் கோஷ் என்பவர் தயாரிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
மேலும் இந்த திரைப்படத்தில் நடிக்கவுள்ள மற்ற நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. கொரோனா ஊரடங்கு முடிவடைந்த பின்னர் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்ற தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் கதாபாத்திரத்தில் காஜல் அகர்வால் நடிக்கவிருப்பதால், இந்த படத்தை ஆர்வமுடன் எதிர்பார்த்து வருகின்றனர் அவரின் ரசிகர்கள்.
இந்நிலையில், இணையத்தில் தன்னுடைய லேட்டஸ்ட் புகைப்படங்களை அப்லோட் செய்து வரும் இவர் தற்போது வெள்ளை மற்றும் நீல நிறத்தினால் ஆன இறுக்கமான ஜிம் உடையை அணிந்து கொண்டு எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் சிலவற்றை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள் “Perfect Shape.. செம்ம ஹாட் ..” என்று வர்ணித்து வருகின்றனர்.