கமல் படத்தில் நடிக்க என்னோட அந்த உறுப்பின் Size கேட்டார்கள்.. “விக்ரம்” பட நடிகை  Priyadarshini Rajkumar..!

தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வரும் நடிகைகளில் பிரியதர்ஷினி ராஜ்குமார் முக்கியமானவர். நடிகர் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா மற்றும் கமல்ஹாசனின் நடிப்பில் பெரும் வெற்றி கொடுத்த விக்ரம் போன்ற திரைப்படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் ப்ரியதர்ஷினி ராஜ்குமார் நடித்திருக்கிறார்.

விக்ரம் திரைப்படத்தில் விலைமாது கதாபாத்திரத்தில் இவர் நடித்திருப்பார் இந்த திரைப்படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கி இருந்தார். இந்த திரைப்படத்தில் தனக்கு வாய்ப்பு கிடைத்ததே ஒரு சுவாரஸ்யமான சம்பவம் என்று தன்னுடைய அனுபவம் குறித்து பகிர்ந்து இருக்கிறார் நடிகை பிரியதர்ஷினி ராஜ்குமார்.

இது குறித்து அவர் கூறும் பொழுது ஒரு நாள் திடீரென என்னை யாரோ தொலைபேசியில் அழைத்தனர். யார் என்று கேட்ட பொழுது ராஜ்கமல் தயாரிப்பு நிறுவனத்தில் இருந்து பேசுவதாக அவர்கள் கூறினர். விக்ரம் திரைப்படத்திற்காக உங்கள் ஆடைகளின் அளவு வேண்டும் என்று கூறினார்.

priyadarshini rajkumar

ப்ரியதர்ஷினி ராஜ்குமாருக்கு வந்த போன்:

எனவே உங்களுடைய சட்டை சைஸ் என்ன?, ஃபேண்ட் சைஸ் என்ன?, உங்களுடைய பஸ்ட் சைஸ் என்ன என்று எனது உச்சி முதல் பாதம் வரை உள்ள அனைத்து அளவுகளையும் தொலைபேசியிலேயே கேட்டுக் கொண்டிருந்தார்கள்.

எனக்கு ஒன்றும் புரியவில்லை இதற்கு முன்பு விக்ரம் பட குழுவில் இருந்து பட வாய்ப்பு தொடர்பாக என்னை யாரும் தொடர்பு கொள்ளவே இல்லை. இந்த நிலையில் திடீரென்று போன் செய்து ஆடைகளின் அளவுகளை எல்லாம் கேட்கிறார்களே என்று அவர்களிடமே இது குறித்து கேள்வி எழுப்பினேன்.

priyadarshini rajkumar1

அப்பொழுது அவர்கள் படக்குழுவில் இருந்து உங்களை அழைப்பார்கள் ஏற்கனவே எங்களிடம் யார் யார் நடிக்க போகிறார்களோ அவர்களுடைய பட்டியலை கொடுத்து விட்டார்கள். எனவே அவர்களுடைய ஆடையின் அளவுகளை வரிசையாக நாங்கள் வாங்கிக் கொண்டிருக்கிறோம் என்று அவர் கூறினார்.

ஏமாற்று வேலையாக இருக்குமோ?:

அப்பொழுதுதான் பேசிக் கொண்டிருந்தவர் காஸ்டியூம் டிசைனர் என்பது தெரிந்தது. சரி என்னை யாரோ ஏமாற்ற பார்க்கிறார்கள் என்று நினைத்துக் கொண்டு கண்டிப்பாக நான் அளவுகளை கூறுகிறேன். அதற்கு முன்பு பாடக்குழுவிடம் சொல்லி என்னிடம் பேச சொல்லுங்கள் என்று கூறினேன்.

அதற்கு பிறகு எனக்கு பட குழுவிடமிருந்து அழைப்பு வந்தது அவர்களும் என்னுடைய கதாபாத்திரம் என்ன என்பதை குறித்து எதுவுமே கூறவில்லை ஆனால் அது இயக்குனர் லோகேஷ் கனகராஜன் திரைப்படம், கமல்ஹாசன் படம் என்று மட்டும் எனக்கு தெரியும்.

எனவே கண்டிப்பாக ஏதாவது முக்கியமான கதாபாத்திரமாகதான் இருக்கும் என்று நான் நம்பினேன். எனவே படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டேன் அதற்குப் பிறகுதான் அந்த காஸ்டியூம் டிசைனருக்கு எனது ஆடைகளுக்கான அளவுகளை கொடுத்தேன் என்று அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் ப்ரியதர்ஷினி ராஜ்குமார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version