இன்று இளம் தலைமுறைக்கு இருக்கக்கூடிய பல பிரச்சனைகளில் முக்கியமான பிரச்சனையாக இருக்கக்கூடியது முகப்பரு – வினால் ஏற்படக்கூடிய பாதிப்புகள் தான்.
முகத்தில் அதிக அளவு பருக்கள் தோன்றி விட்டால் தன்னம்பிக்கையை இழக்க கூடிய சூழ்நிலையில் தற்போது இருக்கக்கூடிய இளைஞர்களும் இளநங்கையர்களும் இருக்கிறார்கள்.
மேலும் பல விதமான கிரீம்களையும், கை வைத்தியங்களையும் பயன்படுத்தினாலும் இவர்களுக்கு பக்காவான ரிசல்ட் கிடைக்காதன் காரணமாக மன அழுத்தத்திற்கு கூட சிலர் ஆளாகி விடுகிறார்கள்.
அப்படிப்பட்ட முகப்பருவை வராமல் இருக்க என்னென்ன வழிகளை பயன்படுத்தலாம் என்ன பொருட்களை பயன்படுத்தினால் கடினமாகவும், வீக்கமாகவும் இருக்கக்கூடிய முகப்பருவையும் இரண்டே நாட்களில் போக்க முடியும் என்பதை எந்த கட்டுரையில் நீங்கள் தெளிவாக பார்க்கலாம்.
முகப்பருவை விரட்ட உதவும் பொருட்கள்:
- புதினா
- வெள்ளைப் பூண்டு
- வேப்பிலை
- பச்சை மஞ்சள்
முகப்பருவை நீக்கக்கூடிய பேஸ்ட்டை செய்யும் முறை
ஒரு கைப்பிடி அளவு புதினா இலையை எடுத்துக்கொண்டு அதில் நான்கு முதல் ஆறு பல் பூண்டினை வைத்து மைய அமியில் அல்லது மிக்ஸியில் போட்டு அரைத்துக் கொண்டால் முகத்திற்கு போடுவதற்கு தேவையான பேஸ்ட் தயாராகிவிடும்.
இந்த பேஸ்டை நீங்கள் முகப்பரு இருக்கக்கூடிய பகுதியில் நன்றாக பூசி விட வேண்டும். மேலும் இந்த பேஸ் உலரும் வரை நீங்கள் உலர விட காத்திருத்தல் மிகவும் முக்கியமான ஒன்றாகும்.
அரை மணி நேரம் இந்த பேஸ்டை முகப்பரு இருக்கும் இடங்களில் போட்டு உலர விட்ட பின்பு குளிர்ந்த நீரில் உங்கள் முகத்தினை சோப்பு போடாமல் கழுவி எடுங்கள்.
பின்னர் நல்ல காட்டன் துணியால் துடைத்து விட வேண்டும். இதனை அடுத்து வேப்பிலையை சிறிதளவு அரைத்து அந்த சாரோடு பச்சை மஞ்சள் சாரினையும் கலந்து வைத்துக் கொள்ள வேண்டும்.
இப்போது நீங்கள் துடைத்துவிட்ட பகுதியில் இருக்கக்கூடிய பருக்களின் மீது இந்த சாரினை லேசாக அப்படியே முகத்தில் அப்ளை செய்து விடுங்கள். இவ்வாறு செய்வதின் மூலம் இந்த வேப்பிலையானது முகப்பருக்களில் இருக்கக்கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதோடு முகப்பருக்களின் வேர் வரை சென்று முகப்பருக்களை அழித்து விடும்.
மேலும் மஞ்சள் மிகச்சிறந்த கிருமி நாசினி என்பதால் மீண்டும் முகப்பருக்கள் வருவதை தடுக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. இதனை செய்யும் போது வேறு எந்த விதமான மருந்துகளோ அல்லது மற்ற பொருட்களையோ நீங்கள் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை.