“கோடையில் முகத்தில் ஏற்படும் முகப்பருவுக்கு சூப்பர் ரமடி..!” – நீங்களும் யூஸ் பண்ணுங்க..!

கோடைகாலம் வந்து விட்டாலே சரும பிரச்சனைகள் தடை விரித்து ஆட துவங்கிவிடும். குறிப்பாக பெண்களுக்கு முகத்தில் அதிக அளவு பிசுபிசுப்பு ஏற்படுவதின் காரணத்தாலும் எண்ணெய் பசையாலும் முகப்பருக்கள் எளிதில் வர ஆரம்பிக்கும்.

 எந்த முகப்பருக்களை எவ்வாறு கோடையில் நாம் சமாளிக்கலாம் என்பதை பற்றி இந்த கட்டுரையில் விரிவாக படித்து தெரிந்து கொள்ளலாம்.

முகப்பரு ஏற்படாமல் இருக்க சில டிப்ஸ்

கோடையில் முகப்பரு ஏற்படாமல் இருக்க வேண்டும் என்றால் தினமும் இரண்டு வேளை குளிப்பதோடு மட்டுமல்லாமல் உங்கள் முகத்தை கழுவ வேண்டும். உங்கள் முகத்தை கழுவுவதற்கு நல்ல ஃபேஸ் வாஷை பயன்படுத்துவது நல்லது.

அதுமட்டுமல்லாமல் ஒரு மைல்ட் கிளின்சரை நீங்கள் பயன்படுத்தும் போது உங்கள் முகத்தில் முகப்பருக்களின் தாக்குதல் அதிக அளவு ஏற்படாமல் தடுக்கப்படும்.

கோடை காலத்தில் அதிகளவு மசாலா பொருட்கள் மற்றும் பொரித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் இதில் இருக்கும் கொழுப்புகள் அனைத்தும் உங்களுக்கு முகப்பருவை ஏற்படுத்தும். எனவே கொலஸ்ட்ரால் குறைந்த அளவு இருக்கும் உணவுகளை எடுத்துக் கொள்வதால் முகப்பருக்கள் வருவதை தடுக்க முடியும்.

வைட்டமின் ஏ அதிகம் இருக்கக்கூடிய உணவு வகைகளை நீங்கள் எடுத்துக் கொள்ளலாம். குறிப்பாக கேரட், பப்பாளி, பசலை கீரை, தக்காளி ஜூஸ் போன்றவற்றை நீங்கள் எடுத்துக் கொள்ளும் போது உங்களுக்கு கோடை காலத்தில் முகப்பரு அதிகளவு வருவது தடுக்கப்படும்.

கோடையில் அதிகளவு மேக்கப் போடுவதை தவிர்த்தால் முகப்பரு தொல்லையிலிருந்து நீங்கள் விடுபட முடியும். முகப்பருகள் அதிகமாக வரும் போது அதில் அரிப்புகள் ஏற்படும்.

 எனவே நீங்கள் உங்கள் கைகளால் முகப்பருவை கிள்ளி விடுதலை அல்லது சொரிந்து விடுதலோ போன்றவற்றை செய்யக்கூடாது.

மேற்கூறிய இந்த குறிப்புக்களை நீங்கள் பாலோ செய்து வந்தால் கட்டாயம் முகப்பருவினால் ஏற்படக்கூடிய தொல்லைகளிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். மேலும் இந்தக் கோடையில் நீங்கள் இதுபோல செய்வதின் மூலம் எண்ணற்ற நன்மைகள் உங்கள் முகத்திற்கு கிடைக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …