“முகப்பரு அதிகமா இருக்கா..!” – டோன்ட் ஒரி இத ஃபாலோ பண்ணுங்க..!

இன்று நிறைய பெண்களின் முகத்தில் முகப்பரு அதிகளவு காணப்படுகிறது. இந்த முகப்பருவை நீக்குவதற்கு எண்ணற்ற செயற்கை முறைகளான பொருட்களை பயன்படுத்தியும், அவர்களுக்கு அதில் போதுமான அளவு மன நிறைவை அடைய முடியாது. ஏனென்றால் அந்த முகப்பருவுக்கு நிரந்தர தீர்வாக அந்த பொருட்கள் இருக்காது.

மேலும் முக லட்சணத்தையே கெடுக்கக்கூடிய முகப்பருவை இயற்கையான வீட்டு வைத்தியத்தைக் கொண்டு சரி செய்யலாம். அந்த எளிய முறைகளை பற்றிய தகவலை இப்போது நீங்கள் பார்க்கலாம்.

முகப்பருவை நீக்கக்கூடிய எளிய முறைகள்

👍முகத்தில் இருக்கக்கூடிய சருமத்தில் எண்ணெய் உற்பத்தி அதிகளவாக இருப்பதால் தான் முகப்பருக்கள் ஏற்படுகிறது. இந்த முகப்பருக்களை நீக்குவதற்கு நீங்கள் வேப்பிலையை அரைத்து உங்கள் முகப்பருவின் மீது அப்படியே தடவி விடுங்கள் இரவு படுக்கும்போது இதுபோல செய்துவிட்டு மறுநாள் காலை குளிர்ந்த நீரால் உங்கள் முகத்தை கழுவி விட்டு பாருங்கள் விரைவில் முகப்பரு மறையும்.

👍புதினா இலை சாறை மற்றும் முல்தான்மெட்டி இரண்டையும் கலந்து பேஸ்ட் போல மாற்றி பகல் நேரங்களில் உங்கள் முகத்தில் போட்டு விடுங்கள். பிறகு ஒரு மணி நேரம் கழித்து இதை கழுவி விடுங்கள். தொடர்ந்து ஒரு மாதம் இது போல நீங்கள் செய்வதின் மூலம் முகப்பரு அடியோடு இருந்த இடம் தெரியாமல் போய்விடும்.

👍துளசி சாறு, எலுமிச்சை சாறு இவை இரண்டையும் சம அளவு எடுத்துக் கொண்டு அத்தோடு இரண்டு சொட்டு ரோஸ் வாட்டர் கலந்து விட்டு உங்கள் முகத்தை காட்டன் பஞ்சுகள் கொண்டு துடைத்து விடுங்கள். அடிக்கடி நீங்கள் இப்படி துடைப்பதின் மூலம் எண்ணெய் வழியக்கூடிய நிலை மாறிவிடும். அந்த நிலை மாறினாலே உங்களுக்கு முகப்பருக்கள் தோன்றுவது இயல்பாகவே குறைந்து விடும்.

மேற்கூறிய குறிப்புகளை நீங்கள் கூறியபடி ஃபாலோ செய்து வருவதின் மூலம் பைசா செலவில்லாமல் உங்கள் முகப்பருவை எளிதில் நீக்க முடியும். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் கட்டாயம் உங்களுக்கு நல்ல ரிசல்ட் கிடைக்கும்.

--- Advertisement ---

Check Also

ratan tata

ரத்தன் டாடாவின் மோசமான அந்த பழக்கம் என்ன மனுஷன்யா நீ.. டாடா இறப்பதற்கு பின் தெரிந்த உண்மை..

இருந்தாலும் மறைந்தாலும் ஊர் சொல்ல வேண்டும் என்ற பாடல் வரிகளுக்கு ஏற்ப நம்மை விட்டு பிரிந்து சென்ற இந்திய தொழில் …