” உடல் எடையை பராமரிக்க பிரண்டை இட்லி பொடியை செய்து சாப்பிடுங்க..!” – கட்டாயம் உங்க பாடி வெயிட் மெயின்டெயின் ஆகும்..!!

தற்போது உடல் எடையை குறைக்க வேண்டும் என்று டயட்டை ஃபாலோ பண்ணக்கூடிய நபராக நீங்கள் இருந்தாலும், இல்லை என்றாலும் எப்போதும் உங்கள் எடையை குறிப்பிட்ட அளவு வைத்துக் கொள்வது தான் ஆரோக்கியம்.

 அப்படி உடல் எடையை குறைப்பவர்கள் பிரண்டை பொடியை உண்டாக்கி இட்லி மற்றும் தோசையோடு உண்ணும்போது கூடுதலாக  சாப்பிட்டாலும் உங்கள் உடல் எடை கூடாது. அப்படிப்பட்ட பிரண்டை இட்லி பொடியை எப்படி செய்வது என்பதை இப்போது பார்க்கலாம்.

 பிரண்டை இட்லி பொடி செய்ய தேவையான பொருட்கள்

 1.பிரண்டை 50 கிராம்

2.உளுந்து 100 கிராம்

3.துவரம்பருப்பு 25 கிராம்

4.பெருங்காயத்தூள் சிறிதளவு

5.மிளகு இரண்டு டீஸ்பூன்

6.வர மிளகாய் ஐந்து

7.உப்பு தேவையான அளவு

8.கருவேப்பிலை சிறிதளவு

9.வெந்தயம் கால் டீஸ்பூன்

10.நல்லெண்ணெய்

11.சட்னி கடலை 25 கிராம்

 செய்முறை

 இளம் பிஞ்சாக இருக்கக்கூடிய பிரண்டையை தேர்வு செய்து அதை நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும். அதற்காக அடுப்பில் ஒரு கடாயை வைத்து சுத்தம் செய்த பிரண்டையை நல்லெண்ணெய் ஊற்றி நன்கு வறுக்க வேண்டும்.

 பிரண்டை நன்கு சிவந்து உடையும் பக்குவத்திற்கு வரும் வரை நீங்கள் எண்ணெயில் நன்கு வறுத்து விடுங்கள். பின்னர்  பிரண்டையை எண்ணெயில் இருந்து நன்றாக வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ளுங்கள்.

 இதனை அடுத்து  மற்றொரு வாணலியில் இதனை அடுத்து மற்றொரு வாணலியில் எண்ணெய் ஏதும் ஊற்றாமல் மேற்கூறிய  பொருட்கள் அனைத்தையும் போட்டு லேசாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.

 இப்போது வறுத்த இந்த கலவை சூடாறும் வரை காத்திருங்கள். சூடாரிய பிறகு மிக்ஸி ஜாரில் போட்டு மைய பொடித்து விடுங்கள்.அதனை அடுத்து வறுத்து வைத்திருக்கும் பிரண்டையையும் அதில் சேர்த்து நன்கு ஓட்டி அரைக்கவும்.

 இப்போது சூடான சுவையான பிரண்டை பொடி தயார் இந்தப் பிரண்டை பொடியை நீங்கள் நெய் அல்லது நல்லெண்ணெய் விட்டு இட்லி மற்றும் தோசைக்கு தொட்டுக் கொள்வதின் மூலம் உடலுக்கு நன்மை அளிக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …