தோஷங்களில் பெரிய தோஷம் இது தான்..! – நிச்சயம் இதை பண்ணுங்க வாழ்வில் ஏற்றம் மட்டுமே..!

புல்லாகி, பூடாகி பல்மிருமாகி என்று சிவபுராணத்தில் வருகின்ற பாடல்களை நீங்கள் ஒரு முறை உங்களுக்குள் சொல்லிப் பார்த்தால் எத்தனை பிறவிகளைக் கடந்து இந்த மனிதப் பிறவியை நாம் எடுத்திருப்போம் என்பது நன்றாக தெரியும். அப்படிப்பட்ட இந்த மனிதப் பிறவியில் ஏற்படுகின்ற பெரிய தோஷம்தான் பித்ரு தோஷம்.

 ஒருவருக்கு பிதுர் தோஷம் இருக்கிறது என்றால் எந்த ஒரு விஷயமும் அவனுக்கு சந்தோசத்தை தராது. மேலும் நிம்மதி இல்லாத வாழ்க்கையை தான் அவன் வாழ்ந்து கொண்டிருப்பான்.

இதற்கு காரணம் நாம் நமது பெற்றோர்கள் நமது முன்னோர்களுக்கு திதி கொடுக்காமல் இருப்பதாலும் கரு சிதைவு செய்வதாலும் இந்த தோஷம் ஏற்படுகிறது என்று சாஸ்திரங்கள் கூறுகிறது.

 எனவே மரணம் அடைந்த நமது முன்னோர்களுக்கு திதி கொடுப்பதை வழக்கமாக கொள்ள வேண்டும். இல்லையென்றால் கயா சென்று கூப சிரார்த்தம் செய்திருக்க வேண்டும்.

மேலும் சக்தி வாய்ந்த இந்த தோஷத்தை நாம் ஜாதகத்தை கொண்டு கணித்து விடலாம். நம்முடைய ஜாதகத்தில் ராகு அல்லது கேதுவுடன் சூரியன் அல்லது சந்திரன் எந்த இடத்தில் ஆவது சேர்ந்து இருந்தால் உங்களுக்கு பித்ரு தோஷம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

 அதுமட்டுமல்லாது உங்கள் ஜாதகத்தில் ராகு அல்லது கேது லக்னத்தில் இருந்து ஒன்று, ஐந்து, ஏழு, ஒன்பது ஆகிய இடங்களில் இருந்தாலும் இந்த தோஷம் உள்ளது.

 எனவே இந்த தோஷத்தால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் பூஜைகள் மட்டும் செய்தால் பரிகாரம் ஆகாது. ஒருமுறை நீங்கள் ராமேஸ்வரம் சென்று குடும்பத்தோடு திலக ஹோமம் செய்ய வேண்டும்.

 அதுமட்டுமல்லாமல் காசி, அலகாபாத், பத்ரிநாத் சென்று தவசம் செய்வதும் திதி கொடுப்பதும் அவசியம் என்று சொல்லப்பட்டுள்ளது. இங்கு செல்ல இயலாதவர்கள் திருவெண்காடு சென்று அங்கு திதி கொடுக்கலாம்.

 உங்கள் குடும்பத்தில் எவரேனும் தற்கொலை செய்து கொண்டிருந்தால் மட்டும் தான் திலக ஹோமம் செய்ய வேண்டும். இல்லை என்றால் திதி கொடுத்தாலே போதுமானது.

 நீங்கள் அவ்வாறு செய்யும்போது உங்கள் முன்னோர்கள் மனம் மகிழ்ந்து உங்களுக்கு ஆசி வழங்குவார்கள். இதன் மூலம் இல்லத்தில் சண்டை சச்சரவு இல்லாமல் இருப்பதோடு தேக ஆரோக்கியம் மற்றும் அஷ்ட ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version