சுச்சி லீக்ஸ்.. தனுஷ் பண்ணது இதைத்தான்.. பல ஆண்டு ரகசியத்தை போட்டு உடைத்த பாடகி சுசித்ரா..!

தமிழ் திரை உலகில் பின்னணி பாடகியாக இருக்கும் சுசித்ரா தற்போது தமிழில் முன்னணி நடிகரான தனுஷ் பற்றி பல்வேறு வகையான குற்றச்சாட்டுகளை முன் வைத்து இருப்பதோடு அவரைப் பற்றி தாறுமாறாக பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி உள்ளது.

இவர் சில வருடங்களுக்கு முன்பே சுச்சி லீக் என்ற பெயரில் திரை உலகில் பிரபலங்களாக இருக்கக்கூடிய பலரது அந்தரங்க புகைப்படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்த லீக்கில் நடிகை நிக்கி கல்ராணி, அனுயா உள்ளிட்டோரின் புகைப்படங்கள் வெளி வந்தது சர்ச்சையை கிளப்பியது.

தனுஷ் பண்ணது இதுதான்..

இந்நிலையில் தமிழில் தற்போது மாஸ் ஹீரோவாக இருக்கும் கஸ்தூரி ராஜாவின் மகன் தனுஷ் பற்றி உங்களுக்கு அதிகளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. இவர் தன் அண்ணன் இயக்கிய துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் கதாநாயகனாக தமிழ் திரை உலகில் அறிமுகம் செய்யப்பட்டார்.

திரையில் தனுஷை பார்த்த பலரும் உருவ கேலி செய்ததை அடுத்து ஒவ்வொரு படத்திலும் இவர் தனது முதிர்ச்சியான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் வட்டாரத்தை அதிகரித்துக் கொண்டதோடு, இது வரை 49-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பல்வேறு விருதுகளையும் பெற்றிருக்கிறார்.

அந்த வகையில் இவர் நடிப்பில் அண்மையில் வெளி வந்த கேப்டன் மில்லர் திரைப்படம் கலவை ரீதியான விமர்சனத்தை தந்ததை அடுத்து மாறி செல்வராஜுடன் ஒரு படம் சேகர் கும்முல்லா இயக்கத்தில் குபேரா என்ற படத்தில் நடித்து வருகிறார்.

நடிகர் தனுஷ் ஆரம்ப நாட்களில் தன்னை விமர்சித்தவர்களுக்கு பதிலடி கொடுக்கக் கூடிய வகையில் நடித்ததின் மூலம் உண்மையான வெற்றியை அடைந்தார். இவர் நடிப்பதோடு நின்று விடாமல் பாடல் ஆசிரியராக, இயக்குனராக, தயாரிப்பாளராக விளங்குகிறார்.

பவர் பாண்டி படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாக அந்த படம் நல்ல வரவேற்பை பெற்றதை அடுத்து தற்போது தனது ஐம்பதாவது படமான ராயன் படத்தில் நடிப்பதோடு அந்த படத்தை இயக்கி இருக்கிறார்.

சுச்சி லீக்ஸ்..

இதனை அடுத்து நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படத்தை இயக்க இருக்கும் இவர் இளையராஜாவின் பயோபிக்கிலும், குபேரா படத்திலும் படு பிஸியாக நடித்து வருகிறார்.

இந்நிலையில் நடிகர் தனுஷ் பற்றி பல்வேறு விதமான பேச்சுக்கள் அதுவும் பெண்கள் விஷயத்தில் இவரது பெயரை இணைத்து பேசி வரும் வேளையில் அதற்கு எந்த பதிலும் தராமல் தனுஷ் அமைதியாக இருக்கிறார்.

அத்தோடு சுச்சி லீக்ஸ் என்ற பெயரில் பிரபலங்களின் பார்ட்டி புகைப்படங்கள், அந்தரங்க புகைப்படங்கள் வெளி வந்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது இதனை பின்னணி பாடகி சுசித்ரா தான் ட்விட்டர் பக்கத்தில் வெளியிடுகிறார் என்று பேசப்பட்டது.

அந்த வகையில் எந்த விவகாரத்தில் தன்னைத் தேவையில்லாமல் இழுத்து விட்டார்கள் என அண்மை பேட்டியில் சொல்லியிருக்கும் பாடகி சுசித்ரா இந்த விஷயத்தில் நடிகர் தனுஷ் எனது முன்னாள் கணவர் கார்த்திக் உள்ளிட்டோர் என்னை பிராங்க் செய்து விட்டார்கள்.

இப்படி பிராங்க் செய்ய ஒரு அக்கவுண்ட் தேவை என்பதால் என்னுடைய கணவர் எனது அக்கவுண்டை தனுஷிடம் கொடுத்துவிட்டார். அத்தோடு இயக்குனர் ஜவகரின் மொபைலை வாங்கி கார்த்திக்கு கண்டப டி மெசேஜ் செய்தவர் தனுஷ் தான் இதுவும் ஒரு வகையான பிராங்க் என்று தான் சொல்லுவார்கள்.

வெளிச்சத்திற்கு வந்த பல ஆண்டு ரகசியம்..

இப்படி என் பெயரை தவறாக சித்தரிக்க முக்கியமான காரணமாக தனுஷ் மாறி விட்ட நிலையில் என்னை மனநிலை சரியில்லாதவர் என்ற முத்திரையும் குத்தி இருப்பதை பார்க்கும் போது எனக்கு சிரிப்பு தான் வந்தது என்று பல ஆண்டு ரகசியத்தை உடைத்து இருக்கிறார் பாடகி சுசித்ரா.

இந்த விஷயம் தற்போது இணையத்தில் வைரலாக மாறியிருப்பதோடு ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாகி விட்டது. இதனை அடுத்து ரசிகர்கள் அனைவரும் இந்த விஷயத்தை அவர்கள் நண்பர்களுக்கு ஷேர் செய்து பேசி வருகிறார்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version