நடிகை நயன்தாராவுக்கு லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டம் உண்டு. அதைவிட அவருக்கு மற்றொரு பொருத்தமான பட்டமும் உண்டென்றால், அதுதான் சர்ச்சை நாயகி. அவர் நடிக்கும் படம் என்றாலும், அவர் கலந்துக்கொள்ளும் விழா என்றாலும் ஏதேனும் ஒரு சர்ச்சை கிளம்பிக்கொண்டே இருக்கும். அது வழக்கமான ஒன்றுதான்.
சமீபத்தில் கலைஞர் 100 விழாவில் கலந்துக்கொள்ள வந்த அவருக்கு, விழா நடக்கும் பகுதிக்கு செல்ல, தனியாக காரில் அழைத்து செல்லவில்லை. நான்கைந்து பேருடன் சென்றதால், அவரது இமேஜ் கெட்டு விட்டது போல் அவர் முகச்சுளிப்பு காட்டி, அதிருப்தியை வெளிப்படுத்தியது வைரலாகி வருகிறது.
சமீபத்தில் நயன்தாரா நடித்த 75வது படமான அன்னபூரணி படம் ரிலீஸ் ஆனது. நிலேஷ் கிருஷ்ணா இயக்கிய அந்த படத்தில் ஜெய், சத்யராஜ், சுரேஷ் சக்ரவர்த்தி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை. ஓடிடி தளத்தில் வெளியாகியும் பெரிய அளவில் ரசிகர்கள் அன்னபூரணியை கண்டுகொள்ளவில்லை.
இந்த சூழலில், அன்னபூரணி படத்தில் பிராமணப் பெண்ணாக நயன்தாரா நடித்திருப்பார். சமையல் போட்டி ஒன்றில் அவர் பங்கேற்று ஜெயிப்பதற்காக போராடுவதுதான் படத்தின் கதை. இந்த படத்தில் கிளைமேக்ஸ் காட்சியில் பிரியாணி சமைப்பது போன்ற காட்சி இடம்பெறுகிறது.
அப்போது பிரியாணி அதிக சுவையாக இருந்து, போட்டியில் ஜெயிக்க வேண்டும் என்பதற்காக, கதையின் கேரக்டர்படி பிராமண பெண்ணான நயன்தாரா, தொழுகை செய்வது போல காட்டியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மும்பை போலீசில் புகார் அளித்துள்ளனர். இந்த பிரச்னை இப்போது விஸ்வரூபம் எடுத்து வருகிறது.