விஜயகாந்த் என்னோட செருப்பு அதை பண்ணுப்போ.. தளுதளுத்த பொன்னம்பலம்..! ரசிகர்கள் சோகம்..!

தமிழ் திரை உலகில் அற்புதமான நடிகராகவும் தமிழ் நடிகர் சங்கத்தை மிக சீரான முறையில் நிர்வாகம் செய்த கேப்டனாகவும் அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்த் பற்றி அதிக அளவு சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.

 

இவரோடு பல படங்களில் வில்லனாக நடித்த பொன்னம்பலம் பற்றி உங்கள் நினைவில் இருக்கலாம். இவர் நடிகர் என்பதோடு மட்டுமல்லாமல் இயக்குனராகவும், தயாரிப்பாளராகவும் திகழ்ந்தவர். இவர் அண்மையில் விஜயகாந்த் க்கும் அவருக்கும் இடையே நடந்த விஷயத்தை மிகவும் சிறப்பான முறையில் பேட்டி ஒன்றில் பகிர்ந்திருக்கிறார்.

விஜயகாந்த் என்னோட செருப்பு அதை பண்ணுப்போ..

வில்லன் நடிகர்களுக்கே உரிய அனைத்து லட்சணங்களும் ஒழுங்கே பொருந்திய நடிகர் பொன்னம்பலம் வில்லனாக நடிக்கும் போது அனைவரும் மிரண்டு போவார்கள். அந்த அளவு தனது நடிப்புத் திறனை ஒவ்வொரு படத்திலும் வெளிப்படுத்தி பெண்களை மிரட்டி இருக்கிறார்.

இவர் இந்த பேட்டியின் போது தவசி படத்தில் தன்னை வில்லனாக தேர்வு செய்ய ரசிகர் மன்றங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திய பிறகு தன்னை வில்லனாக இந்த படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தார்கள்.

ஆரம்பத்தில் இந்த படத்தில் வில்லனாக நடிக்க வேறொரு நடிகரை முடிவு செய்ததை அடுத்து ரசிகர் மன்ற தலைவர்களை அழைத்து ஒரு மீட்டிங் வைத்து அவர்கள் கூறியதை அடுத்து தான் என்னை இந்தப் படத்தில் வில்லனாக நடிக்க வைத்தார்கள்.

இதற்கு காரணம் அந்தப் படத்தில் நான் செய்த கேரக்டரை யார் செய்யலாம் அதற்கு ஏன் என்னை தேர்வு செய்தார்கள் என்று பல்வேறு வகைகளில் கேள்வியை எழுப்பிய பின்பு தான் அந்தப் படத்தில் என்னுடைய செருப்பை கேப்டன் விஜயகாந்த் கழுவும்படி ஒரு காட்சி உள்ளது என்று சொன்னார்கள்.

இதனைக் கேட்டு நான் அதிர்ந்து போனதோடு எதை எந்த ரசிகரும் ஒப்புக்கொள்ள மாட்டார் என்று கூறினேன். அதுமட்டுமல்லாமல் விஜயகாந்திடம் உதை வாங்கிய பின்பு அவருடைய செருப்பை நானும் கழுவத்தான் போறேன். அது வேறு விஷயம் எனினும் இந்த விஷயம் எனக்கு சரியாக தோணவில்லை.

அந்த வகையில் இந்த கேரக்டர் ரோலுக்கு என்னை தேர்வு செய்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. இதனை அடுத்து என்னை தேர்வு செய்ததற்காக கேப்டனிடம் சென்று நான் நன்றி தெரிவித்தேன்.

தளுதளுத்த பொன்னம்பலம்..! ரசிகர்கள் சோகம்..

அதற்கு அவர் தான் என்னைத் தேர்வு செய்யவில்லை மற்றவர்கள் தான் தேர்வு செய்ததாக பெருந்தன்மையோடு கூறினார். மேலும் அவர் கூறியது உண்மை தான் ரசிகர் மன்ற தலைவர்களை அழைத்து அந்த படத்தில் இடம் பெறக் கூடிய காட்சியை சொல்லியே இந்த நடிகரை போடலாமா என்று கேட்டிருக்கிறார்கள்.

அப்போது அனைவரும் எனக்காக பரிந்துரை செய்தது. எனக்கு மிகவும் பெருமையாகவும், கெத்தாகவும் இருந்ததாக வில்லன் நடிகர் பொன்னம்பலம் கூறியிருக்கிறார். மேலும் இந்த சீனில் ஊமைப்பெணனை படாத பாடு படுத்துவதோடு மட்டுமல்லாமல் இந்த படத்தில் நடித்த பின் என் மனைவியே என்னை ஒரு மாதிரியாக பார்த்ததோடு மட்டுமல்லாமல் என் குழந்தைகளும் என்னை ஒரு வில்லன் போலவே பார்த்தார்கள்.

இதனை அடுத்து இந்த விஷயமானது தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களின் மத்தியில் பேசும் பொருளாக மாறி உள்ளது.

இன்று அதிகம் படிக்கப்பட்டவை


Comments are closed.
Tamizhakam