பொன்னியின் செல்வன்.. முக்கியமான ரோலில் ரஜினி மற்றும் கமல்..! – இது நம்ம லிஸ்டுலையே இல்லையே..!

தமிழ்த்திரை உலக வரலாற்றில் ஒரு மிகப்பெரிய பிரம்மாண்டம் யாரும் எதிர்பார்க்காத வரலாற்றுக் காவியம் டைரக்டர் மணிரத்தினம் உருவாக்கியுள்ள படத்தின் முதல் பகுதி வரும் செப்டம்பர் 30ஆம் தேதி  திரை அரங்குகளில் வெளியிடப்படுகிறது.

இருளில் படம் பிடிப்பவர் மணிரத்தினம் என்ற பேச்சுக்கு  முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் இவரது பொன்னியின் செல்வன் மிக பிரம்மாண்டமான முறையில் வளர்ந்துள்ளது. விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா என  முன்னணி நட்சத்திரங்களுடன் படமானது நமது தமிழ் மன்னர்களின் வரலாற்றை நம் கண்முன்னே நிறுத்துவதற்கு வருகிறது.

 இப்படமானது இரண்டு பாகங்களாக வெளிவரும் என தெரிகிறது. இந்த படத்திற்கான பிரமோஷன் வேலைகள் மிகவும் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இப்படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் டீஸர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் ஆதரவை பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

நிச்சயமாக  இந்த பொன்னியின் செல்வன் படம் தமிழ் திரையுலகில் ஒரு மைல்கல்லாக இருக்கும் என்பதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. ஏனென்றால் இதில் உள்ள நடிகர் பட்டாளம் முதலில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள் வரை அவ்வளவு பேரும் இந்த படத்திற்காக கடுமையாக உழைத்து உள்ளார்கள்.

 படத்தின் மாபெரும் இசை வெளியீட்டு விழா மற்றும் டிரைலர் வெளியீடு வரும் செப்டம்பர் 6ஆம் தேதி நிகழவுள்ளது இந்த நிகழ்வில் தளம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன் இருவருக்கும் அழைப்பினை மணிரத்தினம் விடுத்து உள்ளார். மிக நீண்ட காலத்திற்குப் பின்னர் இருவரையும் ஒரே மேடையில் காண்பதற்கு பாலம் அமைத்துக் கொடுத்த இயக்குனர் மணிரத்தினம் அவர்கள்தான்.

மேலும் தனது பட புரமோஷனுக்காக இரண்டு ஜாம்பவான் நடிகர்களை ஒரு ஜாம்பவான் இயக்குனர் அழைத்திருப்பது மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

படத்தைப் பற்றிய பரபரப்பு ஒருபக்கம் ஓடிக்கொண்டிருக்க இருவரையும் ஒரே மேடையில் காண்பதற்காக சென்னையில் உள்ள நேரு உள் விளையாட்டு அரங்கில் நடக்கும் விழாவை பார்ப்பதற்காக மக்கள் அனைவருமே காத்திருக்கிறார்கள். ஒட்டுமொத்த பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ரஜினி, கமல்ஹாசன் ஆகிய இருவருக்கும் பிராண்ட் அம்பாசிட்டார என்ற முக்கிய பாத்திரத்தை கொடுத்துள்ளார் இயக்குனர் மணிரத்தினம்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …