என்ன கன்றாவி இது..? – பொன்னியின் செல்வன் போஸ்டரை பார்த்து.. ஷாக் அடித்து கிடக்கும் ரசிகர்கள்..!

இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் போஸ்டர் ஒன்றை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கிடக்கின்றனர். சீயான் விக்ரம், நடிகர் கார்த்தி, ஜெயம் ரவி, நடிகைகள் திரிஷா, ஐஸ்வர்யாராய், மற்றும் நடிகர் பார்த்திபன் சரத்குமார் என முன்னணி நடிகர்கள் பலரும் நடித்திருக்கும் திரைப்படம் பொன்னியின் செல்வன் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை பெற்றிருக்கின்றது.

வரும் 30ஆம் தேதி வெளியாக உள்ள இப்படத்தின் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு இருக்கின்றன. அந்த வகையில் ஒரு போஸ்டரில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷின் தலையும் திரிஷாவின் உடலையும் சேர்த்து ஒரு போஸ்டரை ஒட்டி இருக்கிறார்கள்.

இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக் அடித்து ஆகி கிடக்கின்றனர். மறுபக்கம் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் ஏகப்பட்ட திரிபுகள் இருப்பதாக தெரிகிறது என்று இந்த படத்தின் டிரைலரை பார்த்த ரசிகர்கள் கூறிவருகின்றனர்.

பொன்னியின் செல்வன் புத்தகத்தை படித்தவர்களுக்கு இந்த திரைப்படம் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா…? என்பது சந்தேகம்தான் என்று கூறுகிறார்கள். காரணம், இந்த படத்தில் பல திரிபுகளை இயக்குனர் மணிரத்தினம் செய்து இருக்கிறார்.

கடவுள் நம்பிக்கையற்ற ஒருவராக இருக்கும் இயக்குனர் மணிரத்தினம் இப்படி ஆன்மீகம் கலந்த ஒரு நாவலை படமாக்கும் பொழுது அதை அவருடைய சித்தாந்ததிற்கு ஏற்ப மாற்றிக்கொள்வது ஏற்கத்தக்கதல்ல.

படம் முழுதுமாக வெளியான பிறகுதான் இது குறித்த விவரங்கள் தெரிய வரும் என்று கூறுகிறார்கள் பொன்னியின் செல்வன் ரசிகர்கள். மறுபக்கம் பாகுபலி இருக்குமா பொன்னியின் செல்வன்..? அல்லது கேஜிஎப் வசூலை ஓரங்கட்டுமா பொன்னியின் செல்வன்..? என்று பல தலைப்புகளில் ரசிகர்கள் பட்டிமன்றம் நடத்தி வருகிறார்கள் ரசிகர்கள்.

இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க இங்க பார்ரா கூத்த.. என்று கூறுவது போலவும்..  இந்த தலை.. அந்த உடலோடு இணையப்போகிறது என்று புலிகேசி பேசுவது போன்றும்.. திரிஷாவின் உடலுடன் ஐஸ்வர்யாராயின் தலையை வைத்து ஒட்டி போஸ்டர் ஓட்டியுள்ளார் ஒரு ஆசாமி.

இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய்க் கிடக்கின்றனர்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …