இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான முகமூடி என்ற திரைப் படத்தில் ஹீரோயினாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா இந்த படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.
மட்டுமல்லாமல் வசூல் ரீதியாகவும் படுதோல்வியை சந்தித்தது. இந்த படம் கொடுத்த அடி அந்த படத்தில் நடித்த நடிகர் ஜீவா மற்றும் இயக்குனர் மிஷ்கின் மற்றும் நடிகை பூஜா ஹெக்டே ஆகிய அனைவருமே திரும்ப ஏழுவதற்கு நீண்ட காலம் ஆகும் என்று கூறும் அளவுக்கு இருந்தது.
இன்னும் சொல்லப்போனால் நடிகை பூஜா ஹெக்டேவை தமிழ் சினிமாவில் இருந்து ஒதுக்கி வைத்து விட்டார்கள் என்றுதான் கூற வேண்டும். ஆனால், தெலுங்கு சினிமாவுக்கு சென்ற இவருக்கு அங்கே நல்ல வரவேற்பு கிடைத்தது.
தெலுங்கில் இருக்கக்கூடிய பல முன்னணி இளம் கதாநாயகர்களுக்கு ஜோடியாக நடித்திருக்கிறார் நடிகை பூஜா. அதன்மூலம் கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகை என்ற பட்டியலில் இணைந்தார்.
தெலுங்கு படங்களில் மட்டுமே நடித்து வந்தாலும் கூட தன்னுடைய இணைய பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு அதன் மூலம் தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியிலும் தன்னுடைய இருப்பை உறுதிப் படுத்திக் கொண்டே வந்தார்.
இதனால் இவருக்கு நடிகர் விஜயின் திரைப்படத்தில் ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. முன்னதாக பீஸ்ட் திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது.
கடைசி நேரத்தில் நடிகை பூஜா ஹெக்டே அந்த வாய்ப்பை தட்டி தூக்கினார். தற்போது வாரிசு திரைப்படத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய் ஜோடியாக நடித்து வருகிறார்.
முகமூடி படம் போலவே பீஸ்ட் திரைப்படமும் விமர்சனரீதியாக படுதோல்வியை சந்தித்தது. நடிகர் விஜய் நடித்திருக்கிறார் என்ற ஒரே காரணத்தால் வசூல் ரீதியாக இந்த படம் தப்பிப் பிழைத்தது.
View this post on Instagram
தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் வண்டி ஓட்டி வரும் நடிகை பூஜா தன்னுடைய இணையப் பக்கத்தில் கிளாமரான புகைப் படங்களை வெளியிடுவது வாடிக்கை.
இந்நிலையில் அவருடைய தோழி ஒருவர் நடிகை பூஜாவுக்கு முத்தம் கொடுக்கும் ஒரு வீடியோ இணையத்தில் வெளியாகி வருகிறது வெளியாகி வைரலாகி வருகிறது.