பூஜா ஹெக்டேவின் புதிய வீடு.. விலையை கேட்டால் தூக்கமே போயிடும் பாஸ்..!

கருப்பு வெள்ளை படங்கள் வந்த அந்த காலகட்டத்தில் பெரிய முன்னணி ஹீரோக்கள் கூட சம்பளம் சில ஆயிரங்களில் தான் வாங்கிக் கொண்டு இருந்தனர். எம்ஜிஆர், சிவாஜி கூட நடிக்க வந்து பல ஆண்டுகளுக்கு பிறகுதான் லட்சம் ரூபாய் என்ற சம்பளத்தை எட்டினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்போதெல்லாம் சினிமாவில் நடிக்க வந்த சில ஆண்டுகளிலேயே 2 கோடி 5 கோடி 10 கோடி 12 கோடி என்று சில நடிகர்களின் சம்பளம் பல மடங்கு எகிறி விடுகிறது. அதிலும் கதாநாயகிகளாக நடிக்கும நடிகைகளின் சம்பளமும் பல மடங்கு அதிகரித்து விட்டது.

கோடிகளில் சம்பளம்

இந்திய சினிமாவில் பல நடிகைகள் இப்போது கோடிகளில் தான் சம்பளம் வாங்கிக் கொண்டிருக்கின்றனர். அதுவும் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு, இந்தி என பல மொழி படங்களில் நடிக்கும் ஹீரோயின்களுக்கு கிராக்கி அதிகமாக உள்ளது.

அதனால் அவர்கள் கோடியாக கோடியாக வாங்கும் சம்பளத்தில் சில வருடங்களிலேயே 50 கோடி ரூபாய் என்பதெல்லாம், மிக சாதாரணமாக எட்டி விடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டே

நடிகை பூஜா ஹெக்டே இந்திய அளவில் சினிமாவில் ஒரு பிரபல கதாநாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் தமிழில் இதுவரை இரண்டு படங்களில் மட்டுமே நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மிஷ்கின் இயக்கிய முகமூடி

டைரக்டர் மிஸ்கின் இயக்கத்தில், ஜீவா கதாநாயகனாக நடித்த முகமூடி என்ற படத்தில் பூஜா ஹெக்டே அறிமுகமானார். இந்த படம் கொள்ளையர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படம். ஆனால் பெரிய அளவில் இந்த படம் ரசிகர்களிடம் ரீச் ஆகவில்லை. அதனால் இந்த படம் மிகப்பெரிய தோல்வியை அடைந்தது.

இதையும் படியுங்கள்: ஸ்ரீதேவி முதல் அமலா பால் வரை.. திருமணத்திற்கு முன்பே வயிற்றில் கருவை சுமந்த நடிகைகள்.. லிஸ்ட்டு பெருசா போகுதே..?

அதன் பிறகு தெலுங்கில் நிறைய படங்களில் நடித்து பூஜா ஹெக்டே ரசிகர்கள் மத்தியில் மிக பிரபலமானார். தொடர்ந்து கன்னடம், இந்தி படங்களிலும் நடித்து தென்னிந்திய அளவில் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக பூஜா ஹெக்டே மாறி இருக்கிறார்.

பீஸ்ட் படத்தில்…

முகமூடி படத்துக்கு பின், பல ஆண்டுகள் கழித்து தமிழில் மீண்டும் பூஜா ஹெக்டே நடித்த படம்தான் பீஸ்ட். இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடித்த பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.

ஆனால், விஜய் நடித்த இந்த படம் விமர்சன ரீதியாக மிகப்பெரிய தோல்வி படமாக அமைந்தது. ஆனால் வசூல் ரீதியாக இந்த படம் விஜய்க்கு வெற்றி படம் தான் என்று கூறப்படுகிறது.

இதையும் படியுங்கள்: என்ன பெரிய தமன்னா.. என்னோட தொடையை பாருங்க.. அநியாயம் பண்ணும் ராஷி கண்ணா..!

மும்பையில் புதிய பங்களா

இந்நிலையில், மும்பையில் புதிதாக பிரம்மாண்டமான பங்களா ஒன்றை விலைக்கு வாங்கி இருக்கிறார் நடிகை பூஜா ஹெக்டே. இந்த பங்களாவின் மதிப்பு 40 கோடி ரூபாய் என்று தகவல் வெளியாகி உள்ளது.
எதிரில் கடலைப் பார்த்தபடி இந்த பங்களா அமைந்துள்ளதால் இந்த பிரமாண்ட பங்களா மிக அழகிய தோற்றத்தில் காணப்படுகிறது.

40 கோடி ரூபாய்

சமீபத்தில் தான் பூஜா ஹெக்டே புதிதாக விலை உயர்ந்த சொகுசு கார் ஒன்று வாங்கி இருந்தார். அதைத் தொடர்ந்து தற்போது 40 கோடி ரூபாய் விலையில் புதிய பங்களா ஒன்றையும் வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பூஜா ஹெக்டேவின் புதிய வீடு 40 கோடி ரூபாய் என்ற விலையை கேட்டு பலருக்கு தூக்கமே போய் விட்டதாக, கமெண்ட் செய்து வருகின்றனர்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version