கடவுள் நம்பிக்கை இல்ல.. ஆனாலும் பூஜை பண்ணனும் போல இருக்கு.. இளசுகளை ஏங்க வைத்த பூஜா ஹெக்டே..!

பெரும்பாலும் வேறு மொழியில் இருந்து வரும் நடிகைகளுக்கு தமிழ் சினிமாவில் பெரும்பாலும் மார்க்கெட் கிடைத்துவிடும். இருந்தாலும் அதில் தப்பி தவறி சில நடிகைகளுக்கு கிடைக்காமல் போவதுண்டு.

அப்படி தமிழ் சினிமாவில் மார்க்கெட்டை இழந்து வேற்று மொழியில் சென்று பிரபலமானவர்தான் நடிகை பூஜா ஹெக்டே. தெலுங்கு சினிமாவில் இவர் மிகவும் பிரபலமான ஒரு நடிகை ஆவார். அவரது வளர்ச்சி என்பது தெலுங்கு சினிமாவில் ஏற்கனவே இருக்கும் நடிகைகளுக்கு அதிர்ச்சியை கொடுத்த ஒரு வளர்ச்சி என்றுதான் கூற வேண்டும்.

தமிழில் முதன் முதலில் ஜீவா நடித்து மிஷ்கின் இயக்கிய முகமூடி திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்தார் பூஜா ஹெக்டே. அந்த திரைப்படத்தில் நடிக்கும் போது அவருக்கு வெறும் 23 வயது தான் ஆகி இருந்தது.

தெலுங்கில் எண்ட்ரி:

அதனால் அவருக்கு நடிப்பும் பெரிதாக தெரியவில்லை. இதனால் அந்த திரைப்படம் அவருக்கு பெரிதாக வரவேற்பை பெற்று தரவில்லை. ஆனால் நடிப்பே பெரிதாக தெரியாவிட்டாலும் கூட கவர்ச்சி மூலமாக மார்க்கெட்டை பெற முடியும் என்கிற சாத்திய கூறுகள் தெலுங்கு சினிமாவில் அதிகமாகவே உண்டு.

இதனை அடுத்து தெலுங்கு சினிமாவில் சென்று முயற்சி செய்தார் பூஜா ஹெக்தே. தெலுங்கில் அவருக்கு வாய்ப்புகளும் கிடைக்க தொடங்கின. ஆரம்பத்தில் கவர்ச்சியாக நடித்து வாய்ப்புகளை பெற்றாலும் கூட பிறகு பூஜா ஹெக்தே தன்னுடைய நடிப்பு திறமையை வளர்த்துக் கொண்டார்.

அவருடைய முக ரியாக்ஷனுக்காகவே ரசிகர்கள் பலரும் அவரது திரைப்படங்களை பார்க்க துவங்கினர். தொடர்ந்து ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அல்லு அர்ஜுன் மாதிரியான தெலுங்கில் உள்ள பெரும் நடிகர்கள் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்புகளை பெற்றார் பூஜா ஹெக்தே.

தமிழில் ரீ எண்ட்ரி:

இந்த சமயத்தில் தமிழில் மீண்டும் அவருக்கு வாய்ப்பு வந்தது. முதன்முதலாக அறிமுகமானதே தமிழ் சினிமாவில்தான் என்பதால் திரும்பவும் தமிழில் வந்து நடிக்க வேண்டும் என்பது பூஜா ஹெக்தேவிற்கும் ஆசையாக இருந்து வருகிறது.

இதற்கு நடுவில் தான் பீஸ்ட் திரைப்படத்தில் நடிப்பதற்கான வாய்ப்பை பெற்றால் பூஜா ஹெக்தே. பீஸ்ட் திரைப்படத்தில் பூஜா ஹெக்தே நன்றாக நடித்திருந்தாலும் கூட அந்த திரைப்படம் ஆவரேஜான திரைப்படமாக இருந்ததால் அதிக எதிர்மறையான விமர்சனங்களை பெற்றது.

அதனை தொடர்ந்து பூஜா ஹெக்தே நடித்தாலே அந்த திரைப்படம் தோல்வியடைந்து விடும் என்று கூறி திரும்பவும் தமிழ் சினிமாவில் அவருக்கு வாய்ப்புகளை மறுத்து வருகின்றனர். இந்த நிலையில் அடிக்கடி சமூக வலைதளங்களில் அனைவரையும் கவரும் வகையில் சிறப்பான புகைப்படங்களை வெளியிடும் பூஜா ஹெக்தே சமீபத்தில் ரசிகர்களுக்கு ஷாக் கொடுக்கும் வகையில் சிறப்பான சில புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார்.

கடவுள் நம்பிக்கை இல்ல, ஆனாலும் பூஜை பண்ணனும் போல இருக்கு என இதுக்குறித்து கருத்து தெரிவிக்கின்றனர் ரசிகர்கள்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version