” முகம் சுளிக்க கூடிய நிலையில் பூஜையறை இருக்கிறதா..!” – அப்படி என்றால் இந்த ட்ரிக்கை ஃபாலோ செய்து பாருங்க..!

நீங்கள் குடியிருக்கும் வீட்டில் தனியாக பூஜையறை இருக்கிறதா. அப்படி என்றால் அந்த பூஜை அறையில் இருக்கின்ற பொருட்கள் மற்றும் இதர பொருட்கள் எந்த நிலையில் இருக்கிறது.

 முகம் சுளிக்கக்கூடிய நிலையில் நீங்கள் பூஜை பொருட்களையும், பிரேம் செய்யப்பட்ட ஸ்வாமி படங்களும் இருந்தால் அதை இப்படி சுத்தம் செய்வதன் மூலம் பூஜையறை பார்ப்பதற்கே புதிய அறை போல மாறிவிடும்.

பூஜை அறையை பராமரிக்க சில குறிப்புகள்

 👍பூஜை அறையில் உள்ள பித்தளை, வெள்ளி மற்றும் செம்பு பொருட்களை நீங்கள் வெதுவெதுப்பான நீரில் ஊற வைத்து செம்பு பாத்திரத்தில் புளி உப்பை வைத்து ஸ்கரப் செய்யும் போது புதிய தோற்றத்தை கொடுக்கும்.

👍 அதுபோலவே வெள்ளி பொருட்கள் சுடு தண்ணீரில் ஊற வைத்து எடுத்த பின் அந்த வெள்ளி பொருட்களை விபூதி கொண்டு நன்கு அழுத்தி தேய்க்கும் போது புதுசு போல் பளபளப்பாகும்.

👍 அதுவே செம்பு சிலைகள் பாத்திரங்கள் என்றால் உப்புடன் வினிகரை சம அளவு கலந்து நன்றாக துடைத்து நல்ல நீரில் கழுவும் போது பரபரப்பாக பளபளப்பாக மாறிவிடும்.

👍பூஜை செய்யும் பகுதியில் கிரானைட் கல்லை நாம் போட்டு இருப்போம். ஒரு சில வீடுகளில் அது மரத்தால் கூட செய்யப்பட்டிருக்கலாம். அந்தப் பகுதிகளில் எண்ணெய் கசிவுகள் அகர்பத்தி சாம்பல் உலர்ந்த பூக்கள் இவற்றை நீங்கள் தினமும் சுத்தப்படுத்தி விட்டால் சுத்தப்படுத்த எளிமையாக இருக்கும்.

👍 அப்படியே அதை சேர்த்து வைத்தால் நாள் அடைவில் பாக்கவே படு பயங்கரமாக காட்சியளிக்கும். எனவே ஒவ்வொரு நாளின் முடிவில் அல்லது வாரத்திற்கு இரண்டு முறை நீங்கள் சோப்பினை நன்கு தெளித்து வெதுவெதுப்பான நீரில் இந்தத் திட்டினை துடைத்து விடுவதால் பார்க்க புதிது போல் அழுக்கு இல்லாமல் இருக்கும்.

👍 மேலும் பூஜை அறையின் கதவுகள் மரத்தால் சிறுசிறு வேலைப்பாடுகள் நிறைந்தவையாக இருக்கும். இவற்றை வரத் துணியால் துடைப்பது நல்லது .மேலும் வருடத்திற்கு ஒருமுறை வார்னிஷ் அடித்து மரக்கதவுகளை நீங்கள் பேணலாம்.

👍 தரைக்கு கீழே போட்டிருக்கும் டைல்ஸ் அல்லது கிரானைட் ஐ சுத்தம் செய்ய தினமும் லைசாலை கொண்டு துடைத்து விடுவதின் மூலம் பளிங்கி தரை அப்படியே பளபளப்பாக இருக்கும்.

👍 மேலும் குங்குமம் போன்றவற்றை கையாளும்போது கவனத்தோடு கையாளுங்கள். தீபம் ஏற்றும்போது தீபத்தின் புகைகள் மேலே எழும்பி செல்லாதபடி நீங்கள் பார்த்துக் கொள்ள வேண்டும்.

👍சுவாமிக்கு உடுத்தக்கூடிய புனித துணிகள் பட்டு புடவையால் தயாரிக்கப்பட்டிருக்கலாம். எனவே அவற்றை நீங்கள் வாரத்தில் ஒருமுறை எடுத்து துவைத்து தேய்த்து மீண்டும் பயன்படுத்தவும். எந்த துணிமணிகளை ஒரு குறிப்பிட்ட கவருக்குள் அல்லது அதற்குரிய பீரோவில் நீங்கள் வைப்பது சிறப்பானதாகும்.

👍பிரேம் செய்யப்பட்ட சுவாமி படங்களை நீங்கள் கண்ணாடி கிளீனர் மூலம்° ஸ்பிரேயைத் தெளித்து அதன் பின் வரத் துணியால் துடைத்து விடுங்கள். அழுக்கு இருந்தால் வரத்துணியால் துடைத்த பின்பு ஸ்பேரே அடித்து மீண்டும் துடைப்பது நல்லது.

 மேற்குரிய வழிமுறைகளை நீங்கள் ஃபாலோ செய்வதின் மூலம் உங்களது பூஜை அறை புத்தம் புதியதாக இருப்பதோடு மட்டுமல்லாமல் தெய்வீக கலை தாண்டவம் ஆடும்படி இருக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …