பூண்டு இருக்கா..? – சப்பாத்திக்கு சப்பு கொட்டி சாப்பிடும் சைட் டிஸ் ரெடி..! – ட்ரை பண்ணி பாருங்க..!

சப்பாத்திக்கு வெஜிடபிள் குருமா தேங்காய் சட்னி, தக்காளி சட்னி, தக்காளி தொக்கு என்று விதவிதமாக நாம் செய்து சாப்பிட்டு போர் அடித்து இருக்கும். இப்போது அதற்கு மாற்றாக பூண்டு குழம்பை வைத்து நீங்கள் சப்பாத்திக்கு சைடிஷ் ஆக கொடுக்கும் போது கூடுதலாக இரண்டு சப்பாத்தி வேண்டும் என்று அனைவரும் கேட்டு வாங்கி சாப்பிடுவார்கள். அந்த அளவுக்கு உடலுக்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய பூண்டு குழம்பினை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

 பூண்டு குழம்பு செய்ய தேவையான பொருட்கள்

 1.பூண்டு 200 கிராம்

2.சின்ன வெங்காயம் 100 கிராம்

 3.வர மிளகாய் 4

4.கொத்தமல்லி இரண்டு டீஸ்பூன்

5.ஒரு டீஸ்பூன் சீரகம்

6.சிறிதளவு வெந்தயம்

7.சிறிதளவு நல்லெண்ணெய் 50 மில்லி 8.உப்பு தேவையான அளவு 9.புளி தேவையான அளவு

10.தேங்காய் கால் கப்

11.தாளிக்க கடுகு

 செய்முறை

முதலில் பூண்டின் தோல்களை நன்கு நீக்கி வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு   வதக்குவதற்கு தேவையான சின்ன வெங்காயத்தை உரித்து வைத்துக் கொள்ளுங்கள்.

இப்போது அடுப்பில் வாணலியை வைத்து நல்லெண்ணெயை ஊற்றி உரித்து வைத்திருக்கும் சின்ன வெங்காயம், கொத்தமல்லி, சீரகம், வெந்தயம் இவற்றை போட்டு போல் நிறமாக வறுத்துக் கொள்ளவும்.

 இதனை வறுத்தபின் அதனோடு வரமிளகாயை போட்டு மீண்டும் வணக்கவும். இது சூடு ஆறும் வரை அப்படியே வைத்திருங்கள். சூடு ஆறிய பின்பு மிக்ஸியில் இதனை அனைத்தையும் போட்டு நன்கு மைய அரைத்துக் கொள்ளவும்.

 இதனை அடுத்து இதனோடு தேங்காயை துருவலை போட்டு அரைத்துக் கொள்ளவும்.அடுப்பில் மற்றொரு வாணலியை வைத்து மீண்டும் நல்லெண்ணையை விட்டு கடுகு கருவேப்பிலையை போட்டு நன்கு வெடிக்க விடவும்.

இது வெடித்த பின்பு இதில் பூண்டை கொட்டி நன்றாக கிளறவும். இதனை கிளறும்போது சிறிதளவு உப்பு மற்றும் புளி கரைசலை ஊற்றி விடுங்கள். இந்த கலவை நன்கு கொதிக்கும் வரை காத்திருக்கவும்.

 பூண்டு நன்கு வெந்த பிறகு அரைத்து வைத்திருக்கும் கலவையை அதனோடு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். தேவை எனில் மஞ்சப்பொடி சேர்த்துக் கொள்ளலாம்.

 இப்போது இந்த கலவை நன்கு கொதித்த பிறகு அடுப்பில் இருந்து இறக்கி விடவும். இதனை நீங்கள் சப்பாத்தியோடு தொட்டு சுவைக்கலாம்.நீங்கள் விரும்பும் பூண்டு குழம்பு தயார் சுடச்சுட இதை சப்பாத்தியில் சாப்பிடும் போது சுவையாக இருக்கும்.

Check Also

உள்ளாடை மாற்றும் காட்சி.. அவர் செய்த காரியம்.. பதறிய ஸ்ரீதேவி..!

நடிகை ஸ்ரீதேவி விருதுநகர் மாவட்டம் மீனம்பட்டியில் பிறந்து இந்திய திரை உலகில் ஒரு புகழ்பெற்ற நடிகையாக விளங்கியவர். இவர் 1969-இல் …