உன் அம்மாவின் அதை பாரு.. மோசமாக கமெண்ட் அடித்த ஆசாமிக்கு பூர்ணா செருப்படி பதில்..!

கேரளாவை சேர்ந்தவர் நடிகை பூர்ணா. மெட்டி ஒலி இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு என்ற படத்தில் பூர்ணா அறிமுகமானார். நடிகர் பரத் இதில் ஹீரோவாக நடித்திருந்தார். இது வெற்றிப்படமாக அமைந்தது.

பூர்ணா

கந்தக்கோட்டை, துரோகி, ஆடு புலி, தகராறு என தமிழில் பல படங்களில் நடித்தார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் நிறைய படங்களில் நடித்திருக்கிறார். இப்போது டெவில் என்ற படத்தில் பூர்ணா நடித்துள்ளார்.

வித்தகன், ஜன்னல் ஓரம், மணல் கயிறு 2, கொடி வீரன், சவரக்கத்தி, அடங்க மறு, காப்பான், லாக்கப் என பல தமிழ் படங்களில் நடித்துள்ளார். தலைவி படத்தில், ஜெயலலிதாவின் தோழி சசிகலா கேரக்டரில் பூர்ணா நடித்திருந்தார்.

சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை பூர்ணா, பல விஷயங்களை மனம் திறந்து கூறியிருந்தார். அவர் கூறியதாவது, நான் வாழ்க்கையில் ஜெயித்து இந்த இடத்தில் இப்போது இருப்பதற்கு முக்கிய காரணம் என் அம்மா தான்.

திருமண பயம்

எனக்கு திருமணம் என்ற போது எனக்குள் ஒருவித பயம் வந்துவிட்டது. ஏனெனில் சினிமாவில் பலரும் திருமணம் செய்துக்கொண்டு நாளடைவில் பலவிதமான பிரச்னைகளால் பிரிந்து விடுகின்றனர். அதற்கு அவர்கள் சினிமாவில் பணிசெய்வதும் ஒரு காரணமாக இருக்கிறது.

என்னால் சினிமாவையும், நடனத்தையும் விட்டு விட்டு இருக்கவே முடியாது. இவை இரண்டுமே எனக்கு தெரிந்த, மிகவும் பிடித்தமான விஷயங்கள். இதில் பெண்களுக்கு சுதந்திரம் என்பது மிக முக்கியம்.

எனக்கு எப்படி என் அம்மா வாய்த்தாரே அது போலவே என் கணவரும் எனக்கு வாய்த்திருக்கிறார். இப்படி ஒரு நல்ல மனிதரிடம் நான் சென்று சேருவேன் என்று எதிர்பார்க்கவே இல்லை.

எதிர்பார்க்கவே இல்லை…

நான் ஒரு இஸ்லாமியரை திருமணம் செய்துக்கொண்டு துபாய் செல்வேன் என்று எதிர்பார்க்கவே இல்லை. எனக்கு நிறைய பொருளாதார சுதந்திரம் கொடுக்கிறார். எனக்கு பிடித்த,. நினைத்த பொருளை, நானே வாங்கிக் கொள்கிறேன்.

குழந்தை பிறந்த 15 நாட்களுக்கு பிறகு நான் குண்டூர் காரம் என்ற தெலுங்கு படத்தில் நடித்தேன். அந்த படத்தில் நான் நடித்த போது மிக குண்டாக இருந்தேன்.

பன்னி மாதிரி…

என்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், என் உடலை கேலி செய்யும் விதமாக பன்னி மாதிரி இருக்கிறீர்கள் என்றெல்லாம் கமெண்ட் செய்திருந்தார்கள்.
அதற்கு நான், உங்கள் அம்மாவை பாருங்கள், அவரும் இதே மாதிரியான ஒரு நடைமுறையை கடந்துதான் வந்திருக்கிறார் என்று பதில் பதிவிட்டேன் என்று கூறியிருக்கிறார் நடிகை பூர்ணா.

தன்னை பன்னி என்று மோசமாக விமர்சித்த ஆசாமிக்கு, உன் அம்மாவின் உடம்பை பாருங்கள் என பூர்ணா செருப்படி பதில் தந்து, தன் கோபத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version