நடிகை பூர்ணா தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் தன்னுடைய காதலரை திருமணம் செய்து கொண்ட இவர் தற்பொழுது கர்ப்பமாக இருக்கிறார்.
தன்னுடைய கர்ப்பத்தை பொது வெளியில் சில புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்திருக்கிறார் நடிகை பூர்ணா. ஷாம்னா காசிம் என்ற உண்மையான பெயர் உடைய இவர் தமிழில் முனியாண்டி விலங்கியல் மூன்றாம் ஆண்டு இந்த படத்தில் நடிகர் பரத்துக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
அதன் பிறகு ஆடு புலி, ஜன்னல் ஓரம், சவரக்கத்தி உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார். இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள பிசாசு 2 திரைப்படத்திலும் நடித்திருக்கிறார்.
இந்த திரைப்படம் இன்னும் வெளியாகவில்லை. நடிகை பூர்ணாவிற்கும் ஷானித் ஆசிப் அலி என்பவருக்கும் கடந்த அக்டோபர் மாதம் திருமண நடைபெற்றது.
இந்நிலையில் நடிகை பூர்ணா இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக தகவலை வெளியிட்டு இருக்கிறார். கூடவே கர்ப்பமாக இருக்கும் தன்னுடைய புகைப்படங்கள் சிலவற்றையும் வெளியிட்டு இருக்கிறார்.
அதனை பார்த்து ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும் தன்னுடைய உடல் நலத்தையும் பேணும்படி அவருக்கு சில அறிவுரைகளையும் அட்வைஸ் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.