படுக்கையறை காட்சியில் பிக்பாஸ் பூர்ணிமா ரவி..! ரசிகர்கள் ஷாக்..!

தமிழ்நாட்டில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் வீடியோக்கள் மூலமாக பிரபலமான பலரில் ஒருவர்தான் பூர்ணிமா ரவி. தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்த இவர் கொரோனா காலக்கட்டத்தில் தொடர்ந்து ரீல்ஸ் செய்து வெளியிட்டு வந்த நிலையில் பிரபலம் ஆனார்.

பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர் மேலும் புகழ்பெற்றார். பிக்பாஸ் வீட்டில் நடிகை மாயாவோடு நட்பான இவர் அவரோடு சேர்ந்து கொண்டு அங்கிருப்பவர்களை நடத்திய விதம் அந்த சமயத்தில் சர்ச்சைக்கு உள்ளானது.

பிக்பாஸில் எண்ட்ரி:

மேலும் அந்த சமயத்தில் மாயாவோடு சேர்ந்துக்கொண்டு மக்கள் மத்தியில் வெறுப்பை சம்பாதிக்கும் வகையில் பல விஷயங்களை செய்திருந்தார் பூர்ணிமா.

அவர்களுடைய குழுவையே அப்போது புல்லி கேங் என்று அழைத்து வந்தனர். ஏனெனில் ஒரு குழுவாக சேர்ந்து அவர்கள் வி.ஜே அர்ச்சனாவை கேலி செய்து வந்தனர். உண்மையில் அந்த சீசனில் வி.ஜே அர்ச்சனா பிக்பாஸில் ஜெயிக்க காரணமாக இருந்தவர்களில் பூர்ணிமாவும் ஒருவர்.

பிக்பாஸிற்கு பிறகு சினிமாவில் வாய்ப்பு தேட துவங்கினார் நடிகை பூர்ணிமா. அவருக்கு மக்கள் மத்தியில் கொஞ்சம் பிரபலமாக இருந்த காரணத்தினால் சில படங்களில் அவருக்கு வாய்ப்புகள் கிடைத்தன. அன்னப்பூரணி திரைப்படத்தில் நடிகர் ஜெய்யின் தங்கையாக நடித்தார் பூர்ணிமா.

சினிமாவில் வாய்ப்பு:

2021 ஆம் ஆண்டு இவருக்கு ப்ளான் பண்ணி பண்ணனும் என்கிற திரைப்படத்தில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அந்த திரைப்படம் அவ்வளவாக வரவேற்பை பெறவில்லை. இதனை அடுத்துதான் அவருக்கு அண்ணப்பூரணி திரைப்படத்தில் வாய்ப்புகள் கிடைத்தது.

இந்த நிலையில் தற்சமயம் நல்ல பேரை வாங்க வேண்டும் பிள்ளைகளே என்கிற திரைப்படத்தில் நடித்துள்ளார் பூர்ணிமா. தொடர்ந்து சில படங்களில் இவருக்கு வாய்ப்புகள் வர துவங்கியுள்ளன.

அதே சமயம் சில வெப் சீரிஸ்களிலும் இவர் நடித்துள்ளார். தற்சமயம் டிஸ்னி ஹாட்ஸ்டார் தயாரிப்பில் லிங்கம் எனும் வெப் சீரிஸில் நடித்து வருகிறார் பூர்ணிமா.

சர்ச்சைக்குரிய பதில் கொடுத்த பூர்ணிமா:

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துக்கொண்டார் பூர்ணிமா ரவி. அந்த பேட்டியில் அவரிடம் படுக்கையறை காட்சிகள் குறித்து சர்ச்சைக்குரிய கேள்விகள் கேட்கப்பட்டது.

படுக்கையறை அல்லது ரொமான்ஸ் காட்சிகளில் நடிக்க சொன்னால் நடிப்பீர்களா? என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த பூர்ணிமா கூறும்போது படுக்கையறை காட்சிகளாக இருந்தாலும் அதில் நடிக்க நான் தயார். ஆனால் அந்த காட்சி கதைக்கு தேவைப்படுவதாக இருக்க வேண்டும்.

கவர்ச்சி வேண்டும் என்று காட்சியை திணித்திருந்தால் அந்த காட்சியில் நான் நடிக்க மாட்டேன் என கூறியுள்ளார் பூர்ணிமா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version