பாக்யராஜை திருமணம் செய்யும் முன்பு அந்த நடிகருடன் காதல்..! பூர்ணிமா குறித்து ரகசியம் உடைத்த பிரபலம்..!

இயக்குனர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்து தமிழ் சினிமாவில் பெறும் உயரத்தை தொட்டவர் இயக்குனர் பாக்யராஜ். பாரதிராஜா 16 வயதினிலே திரைப்படத்தை இயக்கும் பொழுது அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிய துவங்கியவர் பாக்யராஜ்.

பிறகு பாக்யராஜ் தனியாக திரைப்படங்கள் இயக்கத் துவங்கிய பிறகும் கூட பாரதிராஜாவின் திரைப்படங்களில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தார். பாக்யராஜ் அவரது இயக்கத்தில் முதன்முதலாக சுவரில்லா சித்திரங்கள் என்கிற திரைப்படத்தை இயக்கினார்.

பாக்கியராஜ் எண்ட்ரி:

அந்த திரைப்படம் சோகமான கிளைமாக்ஸை கொண்ட திரைப்படமாக இருந்ததால் அப்பொழுது கொஞ்சம் விமர்சனத்தை பெற்றது. பிறகு அதே மாதிரியான கதை அமைப்பைக் கொண்டு தாவணி கனவுகள் என்கிற இன்னொரு திரைப்படத்தை எடுத்தார் பாக்கியராஜ்.

இந்த நிலையில் சிகப்பு ரோஜாக்கள் திரைப்படத்திற்கு பிறகு பாரதிராஜாவிடமிருந்து முழுமையாக பிரிந்தார் பாக்யராஜ். டார்லிங் டார்லிங் டார்லிங் என்கிற திரைப்படத்தை இயக்கும் பொழுதுதான் அந்த படத்தின் கதாநாயகியான பூர்ணிமாவிற்கும் பாக்யராஜுக்கும் இடையே காதல் உண்டானது.

பூர்ணிமாவுடன் திருமணம்:

அதன் பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் பாக்கியராஜை திருமணம் செய்து கொள்வதற்கும் முன்பு நடிகர் மைக் மோகனை காதலித்து வந்தார் பூர்ணிமா என்று கூறுகிறார் பிரபல சினிமா பத்திரிக்கையாளர் சபிதா ஜோசப்.

நடிகர் மைக் மோகன் திரைப்படங்களில் கதாநாயகியாக நடித்திருக்கிறார் நடிகை பூர்ணிமா. பயணங்கள் முடிவதில்லை, நெஞ்சத்தைக் கிள்ளாதே போன்ற படங்களில் நடிக்கும் பொழுது மைக் மோகனுக்கும் இவருக்கும் இடையே நல்ல கெமிஸ்ட்ரி இருந்ததாக கூறப்படுகிறது.

அதேபோல அவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த திரைப்படங்கள் பெரும்பாலும் வெற்றியை கொடுக்கும் திரைப்படங்களாகவே அமைந்தன. இதனால் இவர்களுக்கிடையே பழக்க வழக்கமும் அதிகமாக இருந்து வந்தது என்று கூறப்படுகிறது.

மோகனுடன் மோகம்:

வெளிப்படையாகவே மோகன் பூர்ணிமாவுடன் வெளியில் சுற்றி வந்துள்ளார் ஆனால் மைக் மோகனை பொருத்தவரை அவர் நடிக்கும் படங்களில் உள்ள அனைத்து நடிகைகளுடனும் நெருங்கி பழகக் கூடியவர் என்று ஒரு பேச்சு உண்டு.

அவரது அந்த பழக்கவழக்கம் பூர்ணிமாவிற்கு அவர் மீது அதிருப்தியை ஏற்படுத்தியதால் சில நாட்களுக்குப் பிறகு அவர் மோகனை விட்டு பிரிந்துவிட்டார். அதற்கு பிறகு மோகனும் சினிமாவில் வரவேற்பை இழக்க தொடங்கினார், அதன்பிறகு தான் இயக்குனர் பாக்யராஜை காதலித்து திருமணம் செய்தாராம் பூர்ணிமா.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version