கோடையில் உண்ண வேண்டிய நீர்ச்சத்து உள்ள பூசணிக்காய் கூட்டு..!

 கோடையில் உடலுக்கு நீர் சத்து இன்றியமையாத ஒன்றாகும். இந்த நீர்ச்சத்தை உடல் அதிகமாக வியர்வை மூலம் இழக்கப்படும் போது அதை ஈடு கட்டுவதற்கு தண்ணீர் மட்டும் அல்லாமல் நீர்ச்சத்து அதிகம் இருக்கக்கூடிய காய்கறிகளை நீங்கள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

 அந்த வகையில் வெண்பூசணியில் அதிக அளவு நீர் சத்து இருப்பதோடு மட்டுமல்லாமல் உடலுக்கு லோ கலோரி உணவாக இருப்பதால் உடல் இளைக்க விருப்பம் கொண்டவர்கள் இந்த வெண்பூசணியை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

 பூசணியை கொண்டு கோடையில் மிக சூப்பராக நீங்கள் பூசணிக்காய் கூட்டு செய்து அனைவரையும் விரும்பி சாப்பிட வைக்க முடியும். அதை எப்படி செய்வது என்று இந்த கட்டுரையில் பார்க்கலாம்.

 பூசணிக்காய் கூட்டு செய்ய தேவையான பொருட்கள்

1.கால் கிலோ பூசணிக்காய்

2.இரண்டு கப் தேங்காய்

3.சிறிது சீரகம்

4.துவரம் பருப்பு 50 கிராம்

5.உப்பு தேவையான அளவு

6.மஞ்சள் பொடி

7.பச்சை மிளகாய் 4

தாளிக்க

 8.கடுகு

9.உளுத்தம் பருப்பு

10.கறிவேப்பிலை

11.தேங்காய் எண்ணெய்

 செய்முறை

முதலில் பூசணிக்காயை நன்கு கழுவி அதன் தோலை நீக்கிவிட்டு சிறு சிறு கியூப்புகளாக வெட்டி எடுத்துக் கொள்ளுங்கள்.

 பின்னர் எடுத்து வைத்திருக்கும் துவரம் பருப்பை குக்கரில் போட்டு மைய வேக விட்டு எடுத்து மசித்து வைத்துக் கொள்ளுங்கள்.

 பிறகு அதே குக்கரில் நீங்கள் பருப்பினை மாற்றிவிட்டு சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி தாளிசம் செய்ய தேவையான கடுகு, உளுத்தம் பருப்பு போட்டு வெடிக்க விடவும்.

 இது வெடித்து வந்தவுடன் நறுக்கி வைத்திருக்கும் பூசணிக்காயை  போட்டு அப்படியே நன்றாக ஒரு கிளறவும். பின்னர் நீங்கள் பௌலில் மசித்து வைத்திருக்கும் துவரம் பருப்பை அதில் கொட்டி தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு நீரை விட்டு இதனை வேக விடவும்.

 இந்த கலவை வேகும்போது நீங்கள் துருவி வைத்திருக்கும் தேங்காய் ,பச்சை மிளகாய், சீரகம் இவற்றை மிக்ஸியில் போட்டு மைய அரைத்து எடுத்துக் கொள்ளுங்கள்.

மேலும் இது பாதி வெந்த பதத்தில் இந்த கலவையை நன்கு சேர விடுங்க.ள் பிறகு தேவையான அளவு மஞ்சத்தூளை சேர்த்துக் கொள்ளவும்.

இப்போது கூட்டு நன்கு கொதித்து வந்தவுடன் பச்சை தேங்காய் எண்ணெயை மேலே ஊற்றி கருவேப்பிலை உருகி போட்டால் உங்களுக்கு சூடான சுவையான பூசணிக்காய் கூட்டு ரெடி ஆகிவிடும். இதனை நீங்கள் சாதத்தோடு தொட்டுக்கொண்டு சாப்பிடுவதின் மூலம் மிகவும் சுவையாக இருக்கும்.

Check Also

ப்பா…கேட்டதும் கிறுகிறுனு வருதே.. என்னது 50 வினாடிக்கு இம்புட்டு சம்பளமா? – யாருமா.. அந்த நடிகை..

திரை உலகில் கோடிக்கணக்கில் சம்பளமாக வாங்குகின்ற நடிகர் நடிகைகளை பற்றி உங்களுக்கு சொல்ல தேவை இல்லை. அந்த வகையில் தளபதி …