ரசகுலா போல ஸ்வீட்டு.. மிளகா போல ஹாட்டு.. கவர்ச்சி உடையில் திணறடிக்கும் சுஜிதா..!

சின்னத்திரை தொலைக்காட்சிகளில் வெகு காலங்களாகவே பிரபலமான நடிகையாக இருந்து வருபவர் நடிகை சுஜிதா. தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் நாடகங்களில் நடித்திருக்கிறார்.

அதேபோல தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் படங்களிலும் நடித்திருக்கிறார். 1983 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்த நடிகை சுஜிதா சின்ன வயது முதலே திரை துறையின் மீது ஆர்வம் கொண்டிருந்தார்.

சினிமா ஆசை:

அதனை தொடர்ந்து அப்போதிலிருந்து கதாநாயகியாக வேண்டும் என்பது அவரது ஆசையாக இருந்தது ஆனால் கதாநாயகியாக தொடர்ந்து வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் டிவி சீரியல்களில் நடிக்க தொடங்கினார். பிறகு டிவி நிறுவனங்கள் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகளை வழங்கி வந்தன.

பொதிகை டிவி சேனலில் நாடகம் தொடங்கிய காலகட்டத்தில் இருந்து சுஜிதாவும் நடித்து வருகிறார். சொல்லப்போனால் தமிழில் நாடகம் என்கிற ஒரு விஷயம் உருவான காலகட்டம் முதல் இப்போது வரை அதில் தொடர்ந்து நடத்துவரும் சீரியல் நடிகையாக சுஜிதா இருந்து வருகிறார்.

சீரியலில் எண்ட்ரி:

1998ஆம் ஆண்டு ஒரு பெண்ணின் கதை என்கிற சீரியல் மூலமாக முதன் முதலாக அறிமுகமானார். இந்த சீரியல் பொதிகை சேனலில் ஒளிபரப்பானது அதனை தொடர்ந்து சன் டிவியில் ஒளிபரப்பான கங்கா யமுனா சரஸ்வதி என்னும் சீரியலில் நர்மதா என்னும் கதாபாத்திரத்தில் நடித்தார் சுஜிதா.

பிறகு 2001 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவருக்கு நிறைய சீரியல்களில் நடிப்பதற்கு வாய்ப்புகள் வந்தது. விஜய் டிவி, சூர்யா டிவி, மெகா டிவி, ஜெமினி டிவி, கலைஞர் டிவி இப்படி எக்கச்சக்கமான டிவி சேனல்களில் உள்ள சீரியல்களில் இவர் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து வரவேற்பு:

அதிகபட்சம் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் உள்ள சீரியல்களில் நடித்திருந்தாலும் தெலுங்கு தொடர்களிலும் அவ்வபோது நடித்து வருகிறார் சுஜிதா. அதனால் திரையில் பெரிதாக நடிக்கவில்லை என்றாலும் கூட தென்னிந்தியா முழுவதும் பிரபலமான ஒரு நடிகையாக சுஜிதா இருந்து வருகிறார்.

இப்போது வரை நாடகங்களில் அவர் நடித்துக் கொண்டுதான் இருக்கிறார் தற்சமயம் ஜெமினி டிவியில் கீதாஞ்சலி என்னும் தெலுங்கு சீரியலில் நடித்து வருகிறார். அதேபோல கலைஞர் டிவியில் கௌரி என்னும் சீரியலிலும் நடித்து வருகிறார்.

இதற்கு நடுவே தற்சமயம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் குக் வித் கோமாளி சீசன் போட்டியாளராக இருந்து வருகிறார் சுஜிதா. இவர் தற்சமயம் வெளியிட்டிருக்கும் புகைப்படங்கள் அதிக வரவேற்பை பெரும் வகையில் உள்ளன. மேலும் இத்தனை வருடங்கள் ஆகியும் கூட அவரது அழகு கொஞ்சம் கூட குறையாததை அந்த புகைப்படங்களில் வழியாக பார்க்க முடிகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version