ஒப்பனிங்கே இப்படியா..? பறக்கப்போகும் கோலிவுட் கொடி.. கங்குவா பற்றி தீயாய் பரவும் தகவல்..!

தமிழில் மாறுபட்ட கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகராக நடிகர் சூர்யா இருந்து வருகிறார். சூர்யா ஆரம்பத்தில் விஜய் அஜித் போலவே காதல் கதைகளைதான் தேர்ந்தெடுத்து நடித்து வந்தார். ஆனால் நாட்கள் செல்ல செல்ல சூர்யா தேர்ந்தெடுக்கும் கதைகளில் மாற்றங்கள் இருந்தது.

முக்கியமாக பிதாமகன் திரைப்படத்திற்கு பிறகு சூர்யா தேர்ந்தெடுத்த படங்கள் எல்லாம் வித்தியாசமான கதைகளங்களை கொண்டிருந்தன. மௌனம் பேசியதே, நந்தா மாதிரியான பல திரைப்படங்களை உதாரணத்திற்கு கூறலாம்.

புது வித படங்களில் முயற்சி:

இப்பொழுதும் கூட சூர்யா நிறைய புது முயற்சிகளை எடுத்து வருவது உண்டு. விஜய், அஜித்திற்கு பிறகு பெரிய நடிகராக சூர்யா அறியப்பட்டார். ஆனால் இப்பொழுது தமிழில் டாப் 10 நடிகர்களில் ஒருவராக சூர்யா இருந்து வருகிறார்.

இந்த நிலையில் சூர்யா தற்சமயம் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் நடித்து வரும் திரைப்படம் கங்குவா. ஏற்கனவே சிறுத்தை சிவா தமிழில் நிறைய வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். அஜித்தை வைத்து மட்டும் வீரம், வேதாளம், விவேகம், விசுவாசம் என்று வரிசையாக வெற்றி படங்களை கொடுத்தார்.

பிறகு ரஜினியை வைத்து அண்ணாத்த என்கிற திரைப்படத்தை இயக்கினார் கங்குவா திரைப்படத்தை பொருத்தவரை பெரும் பட்ஜெட்டில் எடுக்கப்படும் திரைப்படமாக இருப்பதால் அதற்கு வரவேற்பு என்பது அதிகமாக இருந்து வருகிறது.

கங்குவா குறித்த எதிர்பார்ப்பு:

இந்த திரைப்படத்தை தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா தயாரித்திருக்கிறார். வருகிற அக்டோபர் 10ஆம் தேதி இந்த திரைப்படம் திரைக்கு வர இருக்கிறது. இந்தி, தெலுங்கு, மலையாளம் மட்டுமின்றி மொத்தம் 38 மொழிகளில் இந்த திரைப்படம் டப்பிங் செய்யப்பட்டிருப்பது பலருக்கும் இன்னும் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாக இருக்கிறது. கண்டிப்பாக முதல் நாளே இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் என்று கணிக்கப்படுகிறது. ஏனெனில் சமீபத்தில் வெளியான கங்குவா திரைப்படத்தின் பாடல் தமிழில் மட்டும் அல்லாமல் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது.

மேலும் ஓடிடி விற்பனையிலும் புது வரலாற்றை படைத்திருக்கிறது கங்குவா திரைப்படம். இதுவரை எந்த ஒரு தமிழ் திரைப்படமும் விற்பனையாகாத அளவிற்கு அதிக விலைக்கு அமேசான் பிரைம் நிறுவனம் கங்குவா திரைப்படத்தை வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. அக்டோபர் பத்தாம் தேதி சூப்பர் ஸ்டார் நடிக்கும் வேட்டை திரைப்படம் வெளியாக இருப்பதால் கண்டிப்பாக கங்குவா திரைப்படம் வேட்டையன் படத்திற்கு பெரிய போட்டியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதுப்பேட்டை படத்துல நிஜமாவே அந்த உறுப்பில்.. ரகசியம் உடைத்த சினேகா..!

Comments are closed.
Exit mobile version